மக்கள் பிரதிநிதியை ராஜினாமா செய்யச் சொல்லி அடாவடி காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>மக்கள் பிரதிநிதியை ராஜினாமா செய்யச் சொல்லி அடாவடி காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், டிச. 3 – திருப்பூர் மாநகராட்சி 53ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினரை ராஜி னாமா செய்து விட்டுப் போங்கள் என்று அடாவடித்தனமாகப் பேசிய திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாந கர காவல் ஆணையருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.கணேசன் புதன்கிழமை அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டுக்கு உட்பட்ட நொச்சி பாளையம் பிரிவு முதல் திருவள்ளு வர் நகர் வரை, விக்னேஸ்வரா நகர் பகுதிகள் மற்றும் குப்பாண்டம்பா ளையம் ஐய்யங்கார் பேக்கரி முதல் ஓடை வரை சாலை பணிகள் நடை பெற வேண்டியுள்ளது. இதற்கு முத்தூர் வீரக்குமார் கன்ஸ்ட்ரக்சன் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த பணி செய்வதற்கு 4 மாதங்க ளாக தாமதம் ஏற்பட்டு வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ரவிச்சந் திரன் இப்பணிகள் தாமதம் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடமும், மாமன்றக் கூட்டத்தின் வாயிலாக வும் விரைவுபடுத்தக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கடந்த நவ.24 ஆம் தேதி முதல் மேற் கண்ட சாலைப் பணிகள் நடை பெற்று வந்தன. எனினும் கடந்த சனிக்கிழமை மழை காரணமாக தார்ச்சாலை பணிகள் நடைபெற வில்லை. திங்கள் முதல் இப்பணி களைத் தொடர்ந்து செய்து முடிப்ப தாக ஒப்பந்ததாரரும் கூறியுள் ளார். இந்நிலையில் உடையாளி என் பவர் நொச்சிபாளையம் பிரிவு தார்ச் சாலை பணிகள் நடைபெறவில்லை என்று கட்சி கிளைச் செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அவரும் இதற்கு உரிய பதில் கூறி யிருக்கிறார். எனினும் ஞாயிறன்று நொச்சிபாளையம் பிரிவில் ஆர்ப் பாட்டம் நடத்தப் போவதாக அறி வித்துள்ளார். இதற்கிடையே அப்பகுதியில் இருந்த வீரபாண்டி காவல் உதவி ஆய்வாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினர் மணிமேகலையின் கணவருமான ரவிச்சந்திரனை அழைத்திருக்கிறார். ரவிச்சந்திரன் அங்கு சென்றபோது நல்லூர் பகுதி உதவி ஆணையர் தையல் நாயகி அங்கிருந்தார். அவர், ரவிச்சந்திரனி டம் சாலை போட தாமதம் ஆவது குறித்து கேட்டிருக்கிறார். இவரும் ஒப்பந்ததாரர் தாமதம் செய்தது பற்றி பதிலளித்துள்ளார். ஆனால் உதவி ஆணையர் தையல் நாயகி, தனது அதிகார வரம்பை மீறி, நீங்களே பணிகளை ரத்து செய்ய வேண்டியது தானே? இதற்கு மாமன்ற உறுப்பினருக்கு அதிகார மில்லை என்று கூறியபோது, முடி யாவிட்டால் மாமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டியதுதானே என்று பொது மக்கள் முன்னிலையில் அடாவடித் தனமாக ரவிச்சந்திரனிடம் பேசியி ருக்கிறார். மேலும் கவுன்சிலரை வரச்சொல் என்றும் மரியாதை குறைவாகப் பேசியிருக்கிறார். மக்கள் முன்னிலையில், தனது பொறுப்பை உணராமல், அதிகாரத் தோரணையில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ராஜினாமா செய்யச் சொல்லி அடா வடித்தனமாக பேசி அவமரியாதை செய்த தையல் நாயகி மீது துறைரீ தியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் கே.கணேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சண் முகம் ஆகியோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். துணை ஆணையரி டமும் நேரில் சந்தித்துப் பேசி, தையல் நாயகி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து விசாரித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாக அவர் உறுதி யளித்தார்.</p>
