பென்சன் உயர்வை மறுக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>பென்சன் உயர்வை மறுக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச.18 - பென்சன் உயர்வை மறுக்கும் பென்சன் விதிகள் குறித்த நிதி சட்டம்-2025- ஐ ரத்து செய்ய வேண்டும். டி.ஓஆர்-இல் உள்ள பங்களிப்பில்லா ஓய்வூதியத்தின் நிதியளிக்கப்படாத செலவு என்ற சொல்லை நீக்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 1.1.2026 முதல் சம்பள கமிஷன் பலன்கள் அரியர்சுடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் புதனன்று திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.பி.யு தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி என்.சி.சி.பி.ஏ தலைவர் கோபால்சாமி, டிஆர்இயு கோட்டச் செயலாளர் கரிகாலன், டி.ஆர்.பி.யு மாதவன், மகேந்திரன், மனோகரன், ஏ.ஐ.பி. ஆர்.பி.ஏ பெரம்பலூர் அமைப்பு செயலாளர் திரிசங்கு, திருச்சி தலைவர் மருதநாயகம், ஐ.டி.பி.ஏ செயலாளர் கண்ணன், ஏ.ஐ.பி. எஸ்.என்.எல்.பி டபுள்யு.ஏ அமைப்புச் செயலாளர் அறிவழகன், ஆர்.இ.பி.யு கோட்டத் தலைவர் வரதராஜன், எஸ்.என்.பி.டபுள்யூ.ஏ தலைவர் ஜெயக்குமார், ஆர்.பி.எப். பென்சனர்ஸ் சங்க தலைவர் கலியப்பெருமாள், டி.இ.பி.ஓ. தலைவர் சுப்பிரமணியன், ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ மாநில உதவி செயலாளர் செல்வன் ஆகியோர் பேசினர்.</p>
