கிராமப்புற சாலையோர ஆபத்தான தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை
2 hours before
<p><strong>கிராமப்புற சாலையோர ஆபத்தான தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை</strong></p><p>உடுமலை, அக். 5– கிராமப்புற இணைப்பு சாலைகளின் இருபுறங்களிலும் ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராமப்புற சாலைகளின் ஓரத்தில் சாய்ந்த நிலையில் உள்ள தென்னை மரங்களில் இருந்து காய்ந்த மட்டைகளும் தேங்காய்களும் அடிக்கடி சாலையில் விழுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் மழை, காற்று காலத்தில் மரங்கள்முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பும் உயிர்ச்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>எனவே, ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான தென்னை மரங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றும், தொடர் கண்காணிப்புமூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
