தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பிரச்சாரம்
28 Sept 2026, 11:33 pm
<p><strong>தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பிரச்சாரம்</strong></p><p>நாகர்கோவில், செப்.28 -தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளை மீறி பல கோடி மக்களின் வாக்குரிமையை பறித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய அளவிலான பிரச்சாரஇயக்கம் திங்களன்று தொடங்கியது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்து துண்டறிக்கை விநியோகம் செய்து, மக்களிடம் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் டி.சுபாஷ்சந்திரபோஸ், சிபிஐ(எம்.எல்) மாவட்டச் செயலாளர் </p><p>ஆர்.சுசீலா ஆகியோர் தலைமை வகித்தனர்.இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகரச் செயலாளர் எஸ். அருணாசலம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.மோகன், நாதன், அஜீஸ், நாகராஜன், ராதாகிருஷ்ணன், பிச்சைப்பால், கிருஷ்ணன் சி.பி.ஐ சார்பில் செல்வராணி, நாகராஜன், சுப்பிரமணியன், சந்திரன், சிபிஐ(எம்.எல்) சார்பில் மாநில நிலைக் குழு உறுப்பினர் எஸ்.எம்.அந்தோணி முத்து, ததேயூஸ், சாந்தி, மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
