தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய தடுப்பணையின் உயரத்தை உயர்த்தக் கோரிக்கை

9 Dec 2025, 4:25 pm
புதிய தடுப்பணையின் உயரத்தை உயர்த்தக் கோரிக்கை
<p><strong>புதிய தடுப்பணையின் உயரத்தை உயர்த்தக் கோரிக்கை</strong></p> <p>கோபி, டிச.9- கோபி அருகே உள்ள வேத பாறை ஓடையின் குறுக்கே அமை யும் தடுப்பணையின் உயரத்தை உயர்த்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி &nbsp;அருகே உள்ள கணக்கம்பாளை யம் வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் காட்டாறுகளின் வழியாக வேத பாறை ஓடையில் கலந்து வெளி யேறுகிறது. ஆண்டுதோறும் சுமார் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் வீணாக பவானி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வேத பாறை ஓடையின் குறுக்கே தடுப் பணை கட்ட வேண்டும் என 30 ஆண் டுகளாக விவசாயிகள் கோரிக்கை &nbsp;விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், வேதபாறை நீர்தேக்கம் கட்டுவது குறித்து ஆய்வு செய்து ரூ.69 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலை யில், நீர்தேக்கம் வனப்பகுதியில் அமைவதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்பதால், வனம், காலநிலை மாற்றம், சுற்று சூழல் அமைச்சகத்திற்கு முழுமை யான ஆவணங்கள் சமர்பிக்கப்படா ததால், ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்க தாமததமானதால் நீர் தேக்கம் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வந்ததன் அடிப்படையில், வேதபாறை ஓடை யின் குறுக்கே 80 மீட்டர் நீளம், 20 &nbsp;மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்க ரூ.6.99 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைவில் தொடங்க வுள்ளனர். இதனையடுத்து தடுப்பணை அமைய உள்ள இடத்தில் மரக்கி ளைகள், பாறைகள் அகற்றப்பட்டு, &nbsp;நீர்வளத்துறை அதிகாரிகள் அள வீடு பணிகளை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது அப் பகுதி விவசாயிகள், வேதபாறை ஓடையின் குறுக்கே அணை கட்ட வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அணைகட்ட அனுமதி கிடைக்காததால், தற்போது தடுப் பணை கட்ட நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கவுள்ளனர். தற்போது உள்ள உயரத்திலேயே தடுப்பணை &nbsp;கட்டப்படுவதால், மழைக்காலங்க ளில் தடுப்பணை நிரம்பி, தண்ணீர் வீணாக செல்லும் நிலைதான் ஏற்ப டும். எனவே, புதிதாக கட்டப்பட வுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.