கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க கோரிக்கை
16 Dec 2025, 3:51 pm
<p><strong>கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க கோரிக்கை</strong></p>
<p>பெரம்பலூர், டிச.16- கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்கிட கோரியும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும் தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை ரத்து செய்திட கோரியும் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு சிஐடியு அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் விளக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் விஜய், மாவட்ட துணைத் தலைவர் ஜே. சரஸ்வதி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், கட்டுமான சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட நிர்வாகி ஏ. ரங்கநாதன், ரங்கராஜ், எம். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
