சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை
19 Nov 2025, 3:33 pm
<p><strong>சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை </strong></p>
<p>திருவண்ணாமலை, நவ.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறு பான்மையினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த அக்.30 அன்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டது. அந்த மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான மேல் நடவடிகாகைக்காக சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு அனுப்பட்ட ஒப்புகை படிவத்தை புதனன்று (நவ.19) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் குழு நிர்வாகிகளிடம் அளித்தார். வீடில்லா சிறுபான்மையினர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். நிகழ்வின் போது, தமிழ்நாடு சிறுபான்மையினர் மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அப்துல்காதர், மாவட்ட தலைவர் கா.யாசர் அராபத், மக்கள் ஒற்றுமை மேடை கன்வீனர் எஸ்.ராம தாஸ், வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சிஎம்.பிரகாஷ்,மாதர் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுகுணா வாலிபர் சங்கம் மாவட்டக்குழு உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
