10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வேட்டை தடுப்புக் காவலர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
28 Jun 2026, 11:47 pm
<p><strong>10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வேட்டை தடுப்புக் காவலர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை</strong></p><p>திருநெல்வேலி, ஜூன் 28– தமிழ்நாடு வனத்து றையில் வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் காடு களின் கண்காணிப்பு பணி களில் வேட்டை தடுப்புக் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர். தமிழகத்தில் உள்ள வன உயிரின சரணால யங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில், வனவிலங் குகளை வேட்டையாடுபவர் களிடம் இருந்து பாது காக்கவும், வனப்பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வும் உள்ளூர் மக்கள் வேட்டை தடுப்பு காவலர் களாக நியமிக்கப்படு கின்றனர். காடுகளின் உண்மையான காவலர் களான வேட்டை தடுப்புக் காவலர்களை தனியார் நிறு வனங்களுக்கு வெளி ஒப்பந்தம் செய்யும் முந் தைய அரசின் திட்டத்தை, தற்போதைய அரசு முற்றி லும் கைவிட வேண்டும் என வன ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பழங்குடி யினரின் வாழ்வாதாரத்தை யும், பணி பாதுகாப்பையும் சீரழிக்கும் இந்த அநீதி யான முடிவை அரசு எடுக்கக் கூடாது. தற்காலிக ஊதிய அடிப்படையில் பணி யாற்றும் இவர்களை, வனத் துறையின் நேரடி கட்டுப் பாட்டில் வைத்திருக்காமல் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. நீண்ட காலம் அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது வேட்டை தடுப்பு காவலர்களின் கோ ரிக்கையாக உள்ளது.</p>
