தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 Feb 2026, 3:02 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

திருப்பூரில் மின்சாரப் பேருந்துகளை இயக்கி பொது போக்குவரத்தை பலப்படுத்த கோரிக்கை

திருப்பூர், பிப்.9- திருப்பூரில் மின்சாரப் பேருந்துகளை இயக்கி பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்று முதலமைச் சரின் என் ஊர் என் கனவு திட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் “என் ஊர் என் கனவு” திட்டத்தின் ஒரு  பகுதியாக நடந்த கலந்தாய்வுக்கூட்டம் கடந்த வாரம் திருப்பூர்  மாவட்டம் செங்கப்பள்ளியில் நடந்தது. மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநா தன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.  இதில் தமுஎகச நிர்வாகி  மு.திருப்பதி பங்கேற்று பேசினார். இதில், ஒருங்கிணைந்த கோவை - திருப்பூர் மெட்ரோரயில் திட்டம் ஏற்படுத்த வேண் டும். திருப்பூர் மாவட்டத்திற்கென்று பொறியியல் கல்லூரி மற் றும் திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதி களில் பெருமளவில் வருவாய் ஈட்டக்கூடிய தொழில்களான பனியன், கறிக்கோழி வளர்ப்பு, கிரைண்டர் பம்ப் உள்ளிட்ட இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஆடை உள்ளிட்ட உற் பத்தி சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கக்கூடிய பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பல்கலைக்கழகம் உரு வாக்கப்பட வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கு வதற்கான “தோழி” விடுதி மற்றும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும். திருப்பூரின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு  காணும் வகையில் நகரத்தை இணைக்கும் சுற்றுச்சாலை  அமைத்தல் மற்றும் குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளை இயக்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை  அதிகப்படுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் அதி கப்படியாக வாழும் பகுதிகளில் அவர்களின் குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்கும் வகையில் பகுதி நேரஇந்தி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மக்க ளின் அறிவுத்தரத்தை மேம்படுத்தும்வகையில் கலை இலக் கிய செயல்பாடுகளை நிகழ்த்துவதற்கான ஒரு உள் அரங்கம்  திருப்பூரில் அமைக்க வேண்டும், பொழுதுபோக்கு அம்சங் கள் அடங்கிய பூங்காக்கள்  உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்களை நடத்து வதற்கும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் நகரின்மத்தியில் பார்க்கிங் வசதியுடன் கூடிய ஒரு நிரந்தர திறந்தவெளி வளாகத்தை ஒதுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர்  சாமிநாதன், பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான “தோழி”  விடுதி கட்ட நெருப்பெருச்சலில் இடம் தேர்வு செய்யப்பட்டுள் ளதாகவும், விரைவில் அங்கு கட்டடம் கட்டப்பட்டு பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

மாநில அளவிலான சிலம்பப் போட்டி 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

நாமக்கல், பிப்.9- நாமக்கல் சிலம்பம் அடிமுறை கலைக்கூடம் சங்கம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் ஞாயிறன்று நாமக்கல் லில் உற்சாகமாக நடைபெற்றன. நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள ‘தி ஸ்பெக்ட்ரம் அகா டமி’ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநில அளவி லான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற் பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர் வத்துடன் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 21 வயது வரை எனப் பல்வேறு பிரிவு களின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற  வீரர், வீராங்கனைகள் ஒற்றைக் கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு,  சுருள் வாள் பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத் தினர். மாணவர்களின் மின்னல் வேக அசைவுகளும், துல்லிய மான சுழற்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந் தன. போட்டிகளைக் காணத் திரண்டிருந்த பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து நாமக்கல் சிலம்பம் அடிமுறை கலைக் கூடம் சங்கத் தலைவர் மாரிமுத்து மற்றும் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: “சிலம்பம் என்பது தமிழர்களின் வீர விளையாட்டு மட்டு மல்ல; அது உடல் வலிமை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக் கையை வளர்க்கும் ஒரு பண்பாட்டுக் கலை. மாணவர்களின் இந்த ஆர்வம், தமிழர் பாரம்பரியக் கலைக்குக் கிடைத் துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.” என்றார். இந்த மாநில அளவி லான போட்டி, இளைய தலைமுறையினரிடையே சிலம்பக் கலை குறித்த விழிப்புணர்வையும் புத்துயிரையும் ஏற்படுத்தி யுள்ளது.

சாலை விபத்தில் மாணவி உயிரிழப்பு

ஈரோடு, பிப்.9- சித்தோடு அருகே ஏற் பட்ட சாலை விபத்தில், கல் லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்  துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், திண் டல் பகுதியை சேர்ந்த மாரி யப்பன் என்பவரின் மகள் தீபிகா (23). இவர் கோபி செட்டி பாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் முது கலை இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலை யில், தனது இருசக்கர வாக னத்தில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலையில் விழுந் தார். அப்போது, பின்னால் பெங்களூருவிலிருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தீபிகா சம் பவ இடத்திலேயே உயிரிழந் தார்.

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

நாமக்கல், பிப்.9- எலச்சிபாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின்போது, விஷப் பூச்சி கடித்து மாணவி உயிரிழந்த சம்ப வம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றி யத்துக்குட்பட்ட 87.கவுண்டம்பாளை யம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகி றது. இப்பள்ளியில் அதேபகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கூலித் தொழி லாளியான மாதேஸ்வரன் - தனலட்சுமி தம்பதியின் மகள் ரக் ஷிதா (8) மூன் றாம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளி கட்டப்பட்டு நூறு ஆண்டுகளானதை யொட்டி, திங்களன்று கலை நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஞாயி றன்று காலை நடைபெற்றது. அப்போது மாணவி ரக் ஷிதா பங்கேற்று நடனமாடி கொண்டிருந்தபோது, அவரது நெற்றி யில் விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படு கிறது. அடுத்த சில நொடிகளில் மாணவி மயக்கமடைந்து கீழே விழுந்தார். தொடர்ந்து, அவருக்கு திருச்செங் கோடு தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்  சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில், திங்களன்று உயிரிழந்தார். இச்சம் பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசி ரியர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரி யர்களிடம் திருச்செங்கோடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகு தியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு குடோனில் விபத்து: தொழிலாளி படுகாயம்

தருமபுரி, பிப்.9- பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், தீக்காயமடைந்த தொழிலாளி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியை அடுத்த ஆலமரத்துப்பட்டி சி.புதூர் பகுதியை சேர்ந்த அசோக் குமாருக்கு சொந்தமாக பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த பரணி (38), பட்டாசுகளை தயாரித்து, விற் பனை செய்து வருகிறார். குடோனில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், அங்கி ருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப் படும். இந்நிலையில், ஞாயிறன்று பட் டாசுகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று வைக்கும்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கும்ப கோணம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாதேஷ் தூக்கி வீசப்பட்டார். காயம டைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த பென்னா கரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை  அணைத்தனர். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், பென்னாகரம் துணை காவல் கண்கா ணிப்பாளர் பாலகிருஷ்ணன், பென்னா கரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஆகி யோர் நிகழ்விடத்திற்கு சென்று ஆலை யின் பாதுகாப்பு, விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.