தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கீழ்பவானி பாசனப் பகுதியில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

22 Dec 2025, 4:02 am
கீழ்பவானி பாசனப் பகுதியில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
<p>கோபி, டிச. 22- கீழ்பவானி பாசனப் பகுதியில் &nbsp;நெல் அறுவடை பணிகளை விவ சாயிகள் &nbsp;தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு இயந்திரங்கள் மற்றும் கொள் முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பவானிசாகர் அணையின் முக் கிய பாசன ஆதாரமான கீழ்பவானி &nbsp;வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப் பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் &nbsp;முதற்கட்டமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 1 லட்சம் ஏக்கர் &nbsp;நிலங்களின் நன்செய் சாகுபடிக் காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி கோபி செட்டிபாளையம், டி.என்.பாளை யம், நம்பியூர் மற்றும் சத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயி கள் தீவிரமாக நெல் சாகுபடியில் ஈடு பட்டனர். முறையான நாற்றாங் கால் அமைப்பு, நடவுப் பணிகள், களை எடுத்தல் மற்றும் உர மேலாண்மை என கடந்த நான்கு மாதங்களாகப் பயிர்களைப் பரா மரித்து வந்த நிலையில், தற்போது &nbsp;</p> <p>&nbsp;</p> <p>நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறு வடைக்குத் தயாராகியுள்ளன. அறுவடை இயந்திரக் கட்டண உயர்வு தற்போது கோபி மற்றும் அதன் &nbsp;சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறு வடைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. ஆனால், தனி யார் அறுவடை இயந்திரங்களின் வாடகை விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. தனியார் இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1,800 முதல் ரூ.2,800 &nbsp;வரை வாடகை வசூலிக்கப்படுவ தால், சாகுபடிச் செலவு அதிகரித்து &nbsp;லாபம் குறைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வேளாண் பொறியியல் &nbsp;துறை தலையிட்டு, அரசுக்குச் சொந் தமான அறுவடை இயந்திரங்களை &nbsp;விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், &nbsp;குறைந்த வாடகையில் இயந்திரங் களை இயக்க நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.</p> <p>இதேபோன்று, அறுவடை செய் யப்படும் நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாமல் விவ சாயிகள் தவித்து வருகின்றனர். தனி யார் வியாபாரிகள் குறைந்த விலைக் குக் கேட்பதால், அரசு நிர்ணயித் துள்ள ஆதார விலை விவசாயிக ளுக்குக் கிடைப்பதில்லை. இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், &ldquo;கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நெல் &nbsp;அறுவடை தொடங்கிவிட்ட நிலை யில், இன்னும் பல இடங்களில் அரசு &nbsp;நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்படவில்லை. இத னால் அறுவடை செய்த நெல் லைப் பாதுகாப்பாக வைக்க இட மில்லாமலும், மழையினால் சேதம டையும் அபாயத்திலும் உள்ளோம். &nbsp;எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஆங்காங்கே கொள்முதல் நிலையங்களை திறந்து, தடையின்றி நெல் கொள் முதல் செய்ய வேண்டும்&rdquo; என வலி யுறுத்தினர். தற்போது பெய்து வரும் அவ் வப்போதைய மழையினால் நெல் தரம் பாதிக்கப்படும் முன்பு, அரசு &nbsp;உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது விவசாயிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.