மஞ்சள் சிறப்பு மையத்தை விரைந்து திறக்க வலியுறுத்தல்
13 Jul 2026, 12:30 am
<p><strong>மஞ்சள் சிறப்பு மையத்தை விரைந்து திறக்க வலியுறுத்தல்</strong></p><p>ஈரோடு, ஜூலை 12- அரச்சலூர் அருகே கட்டப்பட்டுள்ள மஞ் சள் சிறப்பு மையத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தில்தான் அதிகளவில் மஞ் சள் விளைவிக்கப்படுகிறது. கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி ஆகிய வாய்க்கால் பாசனத்துக் குட்பட்ட பெரும்பாலான விவசாயிகள் மஞ் சள் பயிரிடுகின்றனர். குறிப்பாக மொடக் குறிச்சி, கொடுமுடி, கோபி, அவல்பூந்துறை, அரச்சலூர் ஆகிய பகுதிகளில் அதிகப்படி யாக மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இங்கு மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர். ஈரோடு மஞ் சளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு புவிசார் குறி யீடு கிடைத்தது. இதையடுத்து மொடக் குறிச்சி பகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க கடந்த 2018-2019 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய் தது. அதைத்தொடர்ந்து அரச்சலூர் அருகே வடுகபட்டி வினோபா நகரில் 10 ஏக்கர் பரப் பளவில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, 2022-2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற் றது. இந்த மையத்தில் ஒரு பகுதி மஞ்சளை உற்பத்தி செய்யும் விலை நிலங்களாகவும், மற்றொரு பகுதியில் மஞ்சள் சிறப்பு மைய கட்டடம் கட்டும் பணியும் தொடங்கியது. மேலும், விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கான பயிற்சிக் கூடம், ஆய்வுக் கூடம், மஞ்சளை காய வைப்பதற்கான களம், உலர் களம், சூரிய சக்தியுடன் கூடிய களம் மற்றும் மஞ்சள் சிறப்பு மையத்தில் விளை விக்க கூடிய மஞ்சளை இருப்பு வைத்து விவ சாயிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல் வேறு வசதிகள் கொண்ட மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத் தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே, மஞ்சள் விவசாயிகளுக்காக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ள னர்.</p>
