உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரிக்கை
8 Dec 2025, 4:39 pm
<p><strong>உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரிக்கை </strong></p>
<p>கிருஷ்ணகிரி, டிச.8 – மாநகராட்சி பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அமைப்புகளில் தூய்மை பணி யாளர்களை ஊரக உள்ளாட்சித் துறை ஊழி யர்களை பணிநிரந்தர படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.350 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் டி.சீனிவாசன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் என்.ஸ்ரீதர்,மாவட்ட பொரு ளாளர் ஜி.ஸ்ரீதரன்,கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் சீனி வாசன்,மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். நிர்வாகி சுந்தரம்,மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் ஒன்றிய செயலாளர் தேவராஜ்பர்கூர் வட்டக்குழு உறுப்பினர்கள் முருகன, பாசில்பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுத்து பேசப்பட்டதன் அடிப்படையில் அடையாள அட்டை வழங்குவது குறித்து உடனடியாக சிஐடியு சங்கத்துடன் பேசி ஆய்வு செய்து அடை யாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.</p>
