இன்ஜினியரிங் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க கோரிக்கை
9 Dec 2025, 4:25 pm
<p><strong>இன்ஜினியரிங் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க கோரிக்கை</strong></p>
<p>உடுமலை,டிச.9- இன்ஜினியரிங் வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் செவ் வாயன்று உடுமலையில் நடைபெற்ற சிஐடியு இன்ஜி னியரிங் தொழிலாளர் சங்கத் தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலை இன்ஜினி யரிங் தொழிலாளர்கள் சங் கத்தின் தலைவர் தண்ட பாணி தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில், புதிய மோட்டார் வாகன சட்ட திருத் தத்தைக் கைவிட வேண்டும். உடுமலை நக ரத்தில் உள்ள இன்ஜினியரிங் தொழிலாளர் கள் மற்றும் உதிரி தொழிலாளர்களுக்கு மாவட்ட தொழில் மையம் (தாட்கோ) மூலம் கடனுதவி வழங்க வேண்டும். இன்ஜினியரிங் தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும் தனி நலவாரியம் உருவாக்கி பதிவு செய்ய வேண்டும். மேலும் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி சிறப்பாக நடத்தப்படும் என்று முடிவு செய் யப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடுமலை கமிட்டி செயலாளர் ரஹமத்துல்லா, துணைச் செயலாளர் கவுஸ் மைதீன் உள் ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். நிறைவாக மாவட்டக்குழுத் தீர்மானங் களை விளக்கி மாவட்டத் தலைவர் பழனிச் சாமி உரையாற்றினார்.</p>
