தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை
25 Nov 2025, 3:29 pm<p><strong>தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை</strong></p>
<p>அம்பத்தூர், நவ.25- தனியாரிடம் மீட்ட நிலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என அம்பத்தூர் மக்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் செள.சுந்தரமூர்த்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் உள்ளனர். ஆனால் இங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால் தனியார் பள்ளி களை நாடவேண்டியுள்ளது. அதேபோல் அரசு கல்லூரிகள் எதுவும் இல்லை. மேல்நிலைப்பள்ளியும், அரசு கலைக்கல்லூரியும் தேவை என்பது அரசியல் கட்சியினர் மற்றும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் புதூரில் உள்ள அன்னை சத்யா அனாதை இல்லத்திற்கு அரசு வழங்கியிருந்த இடம், வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதால், நீதிமன்ற உத்தரவையடுத்து 3.12 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாயாகும். எனவே அந்த இடத்தை மீண்டும் பள்ளி நிர்வாகத்திற்கு குத்தகைக்கு விடுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அந்த இடத்தை அம்பத்தூர் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என அம்பத்தூரில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், கல்வி யாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது மோகனரங்கம் (காங்கிரஸ்), ஆர்.கோபி (சிபிஎம்), ஏ.லோகேஷ் (சிபிஐ), முனுசாமி (சிபிஐ எம்.எல்), பி.ஏழுமலை (அதிமுக), குரு ஏழுமலை (பாமக), ஆமோஸ் (விசிக), எம்.கே.சுரேஷ் (மதிமுக), கார்வேந்தன் (தி.க), ஹெட்மண்ட் ஜெயேந்திரன் (வாழ்வுரிமைக் கட்சி), அருண் (மே 17), சேகரன் (தமிழர் விடுதலைக் கழகம்), மோகன்ராம் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
