தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும்! கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

6 Jun 2026, 8:13 pm
தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும்! கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும்! கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 6 - மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கள் மற்றும் தமிழ்நாடு மாநில தலை மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து “தமிழ்நாடு வங்கி” உரு வாக்க வேண்டுமென்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.காந்திராஜியை தலை மைச் செயலகத்தில் சந்தித்து சம்மேளன தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன் உள் ளிட்டோர் மனு அளித்துப் பேசினர்.

அந்த மனுவில், “விவசாயக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் தமிழ கத்தில் மூன்றடுக்கு முறையில் செயல் படுகின்றன. இம்முறையை மறுசீர மைக்க ஒன்றிய அரசால் நியமிக்கப் பட்ட பல குழுக்கள் பல்வேறு ஆலோச னைகளை வழங்கி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாகவே கேர ளம், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநி லங்களில் மூன்றடுக்கு முறையினை இரண்டடுக்கு முறையாக மாற்றி யுள்ளன. கேரளத்தில் மாநில தலை மைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘கேரளா வங்கி’ உருவாக்கப் பட்டுள்ளது. அந்த வங்கி அபரிமித மான வளர்ச்சியுடன் செயல்பட்டு ஆசியாவிலேயே சிறந்த முதல் நிலை கூட்டுறவு வங்கியாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று தமிழ்நாட்டிலும் 24 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து “தமிழ்நாடு வங்கி” உரு வாக்க வேண்டும். இதனால் விவ சாயிகளுக்கு வழங்கப்படும் கடன்க ளின் வட்டி விகிதம் 2.5 சதவீதம் வரை குறையும்; நிர்வாகச் செலவு குறையும்.

நகர பணியாளர் கூட்டுறவு வங்கிகள்

மாநிலத்தில் நகரக் கூட்டுறவு வங்கி கள், பணியாளர் கூட்டுறவு வங்கிகள் என 127 உள்ளன. இவை சிறு சிறு வங்கிக ளாக இருப்பதால் இன்றைய வங்கியி யல் போட்டிகளை எதிர்கொள்ள முடி யாமல் பெருத்த சிரமத்திற்குள்ளா கின்றன. இவ்வங்கிகளை மண்டல அள வில் இணைத்தால் பலம் பொருந்திய வங்கிகளாக உருவாகும். அனைத்து வங்கிகளும் லாபமீட்டும். எனவே நகரக் கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.