கடலூர் அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றக் கோரிக்கை
24 Jan 2026, 3:38 pm
<p><strong>கடலூர் அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றக் கோரிக்கை</strong></p>
<p>சிதம்பரம், ஜன. 24- கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சிறப்புப் பன்னோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தக் கோரி, சிதம்பரம் காந்தி சிலை அருகே அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து குடியி ருப்பு நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.என். பன்னீர்செல்வம் தலைமை தாங்கி னார். இயற்கை வேளாண் உழவர் நல சங்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை அலுவ லர்கள் நலச்சங்க மாவட்ட ஒருங்கிணைப் பாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு செயலாளர் கலியமூர்த்தி போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாநில செயலாளர் கோ. பழனி, வர்த்தக சங்க தலைவர் சிவராமவீரப்பன், ஓய்வூ தியர் சங்க நிர்வாகி மனோகர் கலந்து கொண்டு பேசினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஹாஜா மொய்தீன், வேணுகோபால், பாண்டி த்துரை, சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள நகர்களில் உள்ள நகர்நல சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள், விவசாய சங்க தலை வர்கள், விவசாயிகள், மாணவர், வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட னர். அனைத்து குடியிருப்போர் நலச்சங்க ங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் ராக வேந்திரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் நகராட்சி யில் குப்பை களை உடனுக்குடன் அப்புறப் படுத்தி திடக்கழிவு மேலாண்மையை சரி வர செய்திட வேண்டும் என வலியுறுத் தப்பட்டது.</p>
