தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்பெண்ணை ஆற்றினைச் சுத்தப்படுத்தி மாசுகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

22 Jul 2026, 11:50 pm
தென்பெண்ணை ஆற்றினைச் சுத்தப்படுத்தி மாசுகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
<p><strong>தென்பெண்ணை ஆற்றினைச் சுத்தப்படுத்தி மாசுகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை</strong></p><p>திருக்கோவிலூர், ஜூலை 22- கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் தென்பெண்ணையாறு, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மணல் கொள்ளையால் வேகமாக மாசடைந்து வருவதாகவும், இதனைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவாகும் தென்பெண்ணையாற்றில் துரிஞ்சலாறு உள்ளிட்ட பல கிளை நதிகள் கலக்கின்றன. பெங்களூரு மற்றும் ஓசூர் தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளும் கழிவுநீரும் ஆற்றில் கலப்பதால், அதன் மேல்பகுதியிலேயே மாசு தொடங்குகிறது. இதுமட்டுமன்றி, திருக்கோவிலூர் நகராட்சி, அரகண்டநல்லூர் பேரூராட்சி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்புப் பகுதிகளின் கழிவுகள் மற்றும் கொட்டப்படும் குப்பைகளால் ஆற்றின் நீர் மேலும் சீர்குலைகிறது. ஆற்று நீர் நீண்ட தூரம் பயணிக்கும் போது இயற்கையாகவே தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும். ஆனால், அதற்கு உதவும் இயற்கையான வடிகட்டியான மணல் கொள்ளையடிக்கப்பட்டதே ஆறு மிக மோசமாக மாசடைய முக்கியக் காரணம் என நீர்நிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருக்கோவிலூர் பகுதியில் இருந்துதான் சின்னசேலம், வேட்டவலம், செஞ்சி உள்ளிட்ட பல முக்கியக் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இத்தகைய மாசால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கரையோரப் பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தென்பெண்ணையாற்றைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. -ஜே.சசிகுமார்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.