கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500 விலை அறிவிக்க வலியுறுத்தல்
31 Dec 2025, 3:37 pm

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500 விலை அறிவிக்க வலியுறுத்தல்

ஈரோடு, டிச.31- ஒன்றிய அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500 விலை அறி விக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு சக்தி சர்க்கரை ஆலை கிளை ஐந்தாவது மாநாடு கவுந்தப்பாடி யில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் டிபி.கோபிநாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி துவக்கவுரை யாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து வாழ்த் திப் பேசினார். இம்மாநாட்டில், 2021 தேர்தல் வாக்குறுதிபடி நடப்பு பருவத்திற்கு குறைந்தபட்சம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். மாநில அரசு அறிவித்த எஸ்ஏபி விலையை பெற்றுத்தர வேண்டும். விவசாயிகளின் கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். 9.5 புள்ளி தரம் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ஒன்றிய அரசு ரூ.5500 விலை அறிவிக்க வேண்டும். கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக வி.பி. கார்த்திகேயன், செயலாளராக டி.பி.கோபிநாத், பொருளாள ராக செந்தில்குமார் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. கரும்பு விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். முடிவில், ஏ.பி. முத்து வேலப்பன் நன்றி கூறினார்.