இ - பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
29 Nov 2025, 4:58 pm
<p><strong>இ - பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல்</strong></p>
<p>கோவை, நவ.29- இ - பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு சனியன்று திவ்யோதயா அரங்கில், தோழர் ஞானபாரதி நினைவு அரங் கத்தில். மாவட்டத் தலைவர் என். ராமர் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ராஜசிம்மன் வரவேற்றார். ஏ.ஆர்.அப்துல் லத்திப் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்கத் தின் தேசிய துணைத்தலைவர் கே. இளங்கோ மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகுமார், பொரு ளாளர் ஜி.சுப்ரமணியன் ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதில், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நேர் மையான, திறமையான நீதிபதிகள் வெளிப்படைத் தன்மையோடு நிய மிக்கப்பட வேண்டும். இ - பைலிங் (E-Filing) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் தென் இந்தியாவிலும், இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களி லும் அமைக்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க ஆவண செய்ய வேண்டும். பன்னாட்டு வழக் கறிஞர் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்ய அனுமதி அளிக் கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப் படை வசதிகளும், தனி ஓய்வறைக ளும் அமைக்கப்பட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, “அரசியலமைப்புச் சட்டமும் அதன் மாண்புகளும்” என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் சிறப்புரையாற்றினார். இத னைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட் டத் தலைவராக என்.ராமர், செய லாளராக பி.ஜோதிகுமார், பொரு ளாளராக ஜி.சுப்ரமணியன் மற்றும் 43 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் எஸ்.சிவகுமார் நிறைவுரையாற்றினார். முடிவில், ஜி. ஜான்சிரானி நன்றி கூறினார்.</p>
