தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலுக்கான ஊக்க தொகையாக லிட்டருக்கு பத்து ரூபாய் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் கோரிக்கை

23 Dec 2025, 4:05 pm
பாலுக்கான ஊக்க தொகையாக லிட்டருக்கு பத்து ரூபாய் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் கோரிக்கை
<p><strong>பாலுக்கான ஊக்க தொகையாக லிட்டருக்கு பத்து ரூபாய் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் கோரிக்கை</strong></p> <p>தூத்துக்குடி, டிச.23- பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு &nbsp;கோவில்பட்டி யில் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பால் சங்க மாநில பொதுச் செயலாளர் பி பெருமாள், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், தலைவர் ஆர். ராகவன், பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணை செயலாளர் மணி, பால் சங்க மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், ஜார்ஜ் நியூட்டன், லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். &nbsp;சங்கத்தின் மாவட்ட தலைவராக லிங்கம் துணை தலைவர்களாக மகாலிங்கம், பரமசிவபாண்டியன், செயலாளராக ஜி.ராமசுப்பு, துணை செயலாளர்களாக ஜார்ஜ் நியூட்டன், ஜீவராஜ் பொருளாளராக பாலமுருகன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட &nbsp;மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டனர். &nbsp;பாலுக்கான கொள்முதல் விலை பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் பத்து உயர்த்தி ரூபாய் 45 ஆக விலை நிர்ணயித்திடவும், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் அறுபது வழங்கிடவும் வேண்டும். &nbsp;பாலுக்கான ஊக்க தொகை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் வழங்கிட வேண்டும். மாட்டுக்கான கலப்பு தீவனத்தை 50 சதம் மானிய விலையில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.