புளியைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு மாநில அரசு அமைக்கக் கோரிக்கை
13 Feb 2026, 5:58 pm
<p><strong>புளியைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு மாநில அரசு அமைக்கக் கோரிக்கை</strong></p>
<p>கிருஷ்ணகிரி, பிப். 13- புளியைப் பாதுகாக்க அரசு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்றும், அரசே விலையை நிர்ணயித்து நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் சாகுபடியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், புளியைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைத்திடவும், விலை நிர்ணயம் செய்திட வும், நேரடி கொள்முதல் செய்திடவும் விவ சாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ள னர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம் பள்ளி, காவேரிப்பட்டினம், சாமல்பட்டி, ஊத்தங்கரை, கல்லாவி, அரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேல் புளிய மரங்கள் உள்ளன. பருவங்கள் தோறும் சுமார் 200 டன் புளி விளைகிறது. குறிப்பாக அஞ்செட்டி, உரிகம் மலைக் கிராமங்கள், போச்சம்பள்ளி, மத்தூரில் உள்ள மண் வளம் புளி சாகுபடிக்கு உகந்த தாக இருப்பதால், விளையும் புளி அதிக சதைப்பற்றுடன் சுவையாகவும் அதிக விளைச்சல் தருவதாகவும் உள்ளது. இதனால் சந்தைகளில் இப்பகுதி புளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில வியாபாரிகளும் நேரடியாக வந்து வியாபாரத்திற்காக வாங்கிச் செல்கின்றனர். போச்சம்பள்ளி வார சந்தையில் டன் கணக்கில் புளி விற்பனை யாகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் புளியம்பழங்களை உலுக்கி எடுத்து, அதனை கொட்டை, ஓடுகள், நார் நீக்கிச் சுத்தம் செய்து விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டு பருவமழை பரவலாகப் பெய்ததால், கடந்த ஆண்டைக் காட்டிலும் புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இது குறித்து விவசாயி சிவகுரு கூறுகையில், “நடப்பாண்டு புளி விளைச்சல் நன்றாக உள்ளது. இருப்பினும் புளியைப் பாது காத்து வைக்கக் குளிர்பதனக் கிடங்கு போச்சம்பள்ளியில் இல்லாததால், இடைத்தரகர்கள் மாவட்டம் முழுவதும் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு அடித்துப் பேசி, அடி மாட்டு விலைக்குப் புளியை வாங்கிச் செல்கின்றனர். இதனால் புளியம்பழம் விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகள் தொடர்ந்து நட்டமடைந்து வருகிறோம். எனவே புளியைப் பாதுகாப்பாக இருப்பு வைக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். புளிக்கு ஆதரவு விலை நிர்ணயித்து, நேரடியாக விவசாயிகளிடம் இருந்து புளியைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புளி விளைச்சலில் ஈடு படும் அனைத்து விவசாயிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்குத் தனது கோரிக்கையை விடுத்தார்.</p>
