தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருதாலம் கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

10 Aug 2026, 12:43 am
மருதாலம் கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

மருதாலம் கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

ராணிப்பேட்டை,ஆக. 9- சோளிங்கர் வட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதாலம் கூட்ரோடு பேருந்து நிலையம் சுற்றிஉள்ள அனைத்து கிராமங்க ளையும் ஒன்றிணைக்கும் முக்கிய சந்திப்பாக விளங்கி வருகிறது.இச்சாலை வழியே வாலாஜா, கொளத்தேரி கேட் வழியாகவும், அம்மூர்ரயில்வே நிலையம் வழி யாகவும் வந்து சோளிங்கர் - திருத்தணி முக்கிய சாலையை இணைக்கும் இரு வழிகள்உள்ளன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருதாலம் கூட்ரோடு பேருந்து நிலைய பகுதியின் அருகே,

மருதாலம் ஊராட்சிக்குட் பட்ட தாணியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இச்சாலை வழியாக நாள்தோறும் அரக்கோணம், திருத்தணி, வேலூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இப்பகுதியைச் சுற்றி ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், கனரக வாகனங்களின் போக்கு வரத்தும் நாள்தோறும் மிக அதிகமாகக் காணப்படு கிறது.

இந்நிலையில், பள்ளி அமைந்திருக்கும் குறிப்பிட்ட இடத்தில் இதுவரை எந்தவொரு வேகத்தடையும் அமைக்கப் படவில்லை. இதனால் பள்ளி தொடங்கும் மற்றும் முடிவடையும் வேளையில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிவேகத்தில் வரும் வாக னங்களுக்கு இடையே அச்சத்துடன் சாலையைக் கடக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பெரும் விபத்துக் கள் எதுவும் ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு அப்பகுதியில் தகுந்த வேகத்தடைகளை அமைக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.