தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க வலுவான தனிச்சட்டம் அவசியம் கே.என்.பாஷா ஆணையத்திடம் தலித் விடுதலைக்கான தேசிய மேடை, மாதர் சங்கம் வலியுறுத்தல்!

10 Aug 2026, 9:28 pm
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க வலுவான தனிச்சட்டம் அவசியம் கே.என்.பாஷா ஆணையத்திடம் தலித் விடுதலைக்கான தேசிய மேடை, மாதர் சங்கம் வலியுறுத்தல்!

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க வலுவான தனிச்சட்டம் அவசியம்

கே.என்.பாஷா ஆணையத்திடம் தலித் விடுதலைக்கான தேசிய மேடை, மாதர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை, ஆக. 10 - தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தவும், சாதி மறுப்புத் தம்பதியினரின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவும் வலுவான தனிச்சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்திடம் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாதிரிச் சட்டம் குறித்தவிரிவாகோரிக்கைகளை முன்வைத்து, தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (DSMM) அகில இந்திய துணைத்தலைவர் சுபாஷினி அலி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி,டிஎஸ்எம்எம் அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், அகில இந்திய துணைச் செயலாளர்க.சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாதர் சங்க மாநிலதுணைச் செயலாளர் ம.சித்ரகலா, ததீஒமு மாநிலக்குழு உறுப்பினர் க.மாடசாமி மற்றும் வழக்கறிஞர்கள்டி.ஆர்.உதயகுமார், பிரிதிகா உள்ளிட்டோர் சென்னை எழும்பூரில் உள்ள ஆணைய அலுவலகத்தில் திங்களன்று(ஆக. 10) காலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கோரிக்கைகள்

சட்டப்பூர்வ வரையறை: சாதி ஆணவக் கொலைகள், சாதி மறுப்புத் திருமணத் தம்பதியர் மீதான துன்புறுத்தல் மற்றும் இணையர் தெரிவு உரிமை ஆகியவற்றை உணர்வுரீதியான, உடல்ரீதியான, உளவியல் மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களின் அடிப்படையில் மிகவும் வலுவாக வரையறை செய்ய வேண்டும். சாதி, மதம், கோத்திரம், சமூகக்குழு, வர்க்கம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்ததாக இணையர் தெரிவுரிமையை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும்.

குற்றங்களின் விரிவான பட்டியல்: தம்பதியரைப் பிரித்தல் அல்லது பிரிக்க முயற்சித்தல், அச்சுறுத்தல்கள், கடுமையான தாக்குதல்கள், ஆட்கடத்தல், கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், கட்டாயச் சிறைவைப்பு, பொருளாதார மற்றும் சமூகப் புறக்கணிப்பு, கிராமத்திலிருந்து விலக்குதல், சட்டவிரோதப் பஞ்சாயத்துத் தீர்ப்புகள், பொது அவமானம், சொத்துகளைப் பறிமுதல் செய்தல் மற்றும் குடியிருப்பிடத்திலிருந்து வெளியேற்றுதல் போன்ற செயல்களைத் தீவிரக் குற்றங்களாகச் சட்டம் கருத வேண்டும். இப்பாதுகாப்புத் தம்பதியரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சாட்சிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.

நிரூபிக்கும் பொறுப்பு (Burden of Proof): குற்றம் இழைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதே சுமத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான அதிகார ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இம்முறை அவசியமான நடைமுறைப் பாதுகாப்பாகும்.

கூட்டுத்தன்மை மற்றும் கட்டமைப்புப் பரிமாணம்: சாதிப் பெருமை சார்ந்த வன்முறைகள் தனிநபர்களால் இழைக்கப்படுவதல்ல; அவை கூட்டுத்தன்மை கொண்டவை மற்றும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே, சமூக அழுத்தம், சட்டவிரோதப் பஞ்சாயத்துகள் மற்றும் சாதி அணிதிரட்டல் ஆகியவற்றுக்குப் பங்குள்ள அனைவரையும் தனிநபர் பொறுப்பைக் கடந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு: அரசுப் பாதுகாப்பு இல்லங்கள், 24 மணி நேர நெருக்கடி உதவி, ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு முறைமை, சிறப்புச் செல்கள், கூடுதல் நிவாரணம், கல்வி மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்: சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்பது, சாதிப் பெருமிதம் கோரும் திருமண விளம்பரங்களைத் தடை செய்வதுடன், பண்பாட்டுத் தளங்களில் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான பிரச்சாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.