ராஜகோபால் பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தரமாக பேருந்து இயக்க வலியுறுத்தல்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>ராஜகோபால் பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தரமாக பேருந்து இயக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப்.16- தருமபுரி பழைய (ராஜகோ பால்) பேருந்து நிலையத்திலி ருந்து, உள்ளூர் பகுதிகளுக்கு நிரந்தரமாக பேருந்து இயக்க வேண்டும் என வியாபாபாரிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி ராஜகோபால் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம், செங்கொடி புரத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. வியாபாரிகள் சங்கத் தலை வர் பாபு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், அரூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான பி.டில்லிபாபு கோரிக்கைகள் குறித்து பேசினார். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பூபால், முனி யப்பன், முருகேசன், சண்முகம், மாதேஷ், ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று பேசினர். இக்கூட்டத் தில், தருமபுரி நகரின் மையப்பகுதி யில் பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையம் 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத் தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து இயக்கப்பட் டன. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கம் போக்குவரத்து நேரில் அதிகமானாதால், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் தனியார் வழங்கிய நிலத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இங் கிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டதால், ராஜகோபால் பேருந்து நிலையம் வெறிச்சோடி, பேருந்து நிலைய வியாபாரிகள் வருமானமின்றி தவித்தனர். பழைய பேருந்து நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாவட்ட நிர் வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். அதன்பேரில் திருப்பத்தூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, சேலம், திரு வண்ணாமலை ஆகிய ஊர்களின் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி இயக்கப் படும் என மாவட்ட நிர்வாகம் அறி வித்தது. மேலும், உள்ளூர் அள வில் இயங்கும் பேருந்துகளை நிரந்தரமாக தருமபுரி ராஜகோ பால் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும். இக்கோரிக் கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளரையும், போக்குவரத்துத் துறை அமைச்சரையும் சந்தித்து மனு அளிப்பதென முடிவு செய் யப்பட்டது.</p>
