கல்வராயன்மலையில் காவல்துறைக்கு கடும் பணிச்சுமை: சேராப்பட்டில் புதிய காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
30 Jun 2026, 12:06 am

கல்வராயன்மலையில் காவல்துறைக்கு கடும் பணிச்சுமை: சேராப்பட்டில் புதிய காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, ஜூன் 29- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வ ராயன்மலை ஒன்றியத்தில் சுமார் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க ஒரே ஒரு காவல் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருவதால், அங்குள்ள காவலர்கள் கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்புத் தேவையை முன்னிட்டு, இப்பகுதியில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

142 கிராமங்களுக்கு ஒரு காவல் நிலையம் கரியாலூரில் உள்ள ஒரே ஒரு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில், 13 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 142 கிராமங்கள் உள்ளன.

இந்த காவல் நிலையத்தின் எல்லை சுமார் 70 கி.மீ சுற்றளவு கொண்ட மலைப்பகுதியை உள்ளடக்கியது.

இவ்வளவு பெரிய பரப்பளவைக் கண்காணிக்க, ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட வெறும் 15 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

புகார் அளிப்பதில் சிக்கல் மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள், புகார் அளிக்க கரியாலூர் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமானால், 30 முதல் 40 கி.மீ தொலைவு கொண்ட கடினமான மலைப்பாதைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

பொதுப்போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லாததால், பல நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்காமலேயே திரும்பும் சூழல் உள்ளது.

காவல்துறைக்கும் தூரமான இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

குற்றச்செயல்கள் அதிகரிக்கும் அபாயம் போதிய காவலர்கள் இல்லாததால், இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, மலையின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், திருவிழாக் காலங்கள், சாலை மறியல் அல்லது ஆர்ப்பாட்டங்களின்போது போதிய பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் உள்ளது.

புதிய காவல்நிலையத் தேவை இச்சீர்க்கேட்டைச் சரிசெய்ய, கரியா லூர் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என மலைவாழ் மக்க ளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வஞ்சிக்குழி, கிளாக்காடு, இன்னாடு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி, சேராப்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையத்தை உரு வாக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டால், காவலர்களின் பணிச்சுமை குறைவதோடு, மலைவாழ் மக்களுக்கு உடனடி பாதுகாப்பு கிடைப்ப தையும், குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப் படுவதையும் உறுதி செய்ய முடியும்.

எனவே, மாவட்டக் காவல்துறையும் தமிழக அரசும் இப்பிரச்சினையில் உடன டியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.