நரசிங்கனூரில் புதிய பிடிஓ அலுவலகம் கட்ட வேண்டும்: தவிச கோரிக்கை
6 Oct 2026, 1:24 am

நரசிங்கனூரில் புதிய பிடிஓ அலுவலகம் கட்ட வேண்டும்: தவிச கோரிக்கை

விழுப்புரம், அக்.5-விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலகம் நரசிங்கனூரில் கட்டிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த மனுவில் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் தலைமையில் மாவட்ட தலை வர் பி.சிவராமன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் அரசாணை நிலை எண் 58ன் கீழ் 27 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்ட ஆணையில் காணை விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திக்குட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி பொதுமக்களின் வசதிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் புதிய ஒன்றியம் கஞ்சனூர் என பிரிக்கப்பட்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கிடையில் சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கஞ்சனுார் ஒன்றியத்திற்கான தற்காலிக அலுவலகமோ நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் போனது. ஆனால் பல இடங்கள் பார்க்கப்பட்டு பொருத்தமான கட்டிடம் கட்டுவதற்காக விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே செஞ்சி சாலையில் நரசிங்கனூர் கிராம சர்வே எண் 218/1, 2 ஆகிய புல எண்ககளில் 0.84.0 ஏர்ஸ் தரிசு நிலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டும் இருந்தது.

தற்போது புதிய அரசு அமைந்தவுடன் அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டு பொதுமக்கள் மற்றும் போக்கு வரத்துக்கு வசதியில்லாத வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30ந்தேதி அன்று அரசு அலுவலர்கள் இடத்தை பார்த்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

எனவே எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லாத இன்றுவரை பாட்டை - தரிசு என்று வருவாய் கணக்கில் உள்ள செஞ்சி விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு அருகில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் பொருத்தமான இடமான நரசிங்கனூரில் சர்வே எண் 218ல் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்ட வேண்டும். ஆனால் பொருத்தமற்ற காரணங்களை சொல்லி, அந்த இடத்தை தவிர்ப்பது, உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. எனவே, ஏற்கனவே கட்டிடம் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வே எண் 218ல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.