தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் முடங்கும் ஊராட்சி நிர்வாகம்! விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த

2 Nov 2026, 11:54 pm
மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் முடங்கும் ஊராட்சி நிர்வாகம்! விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த

மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் முடங்கும் ஊராட்சி நிர்வாகம்! விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தல்உடுமலை, நவ.2-உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், கிராம ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாகஊராட்சி நிர்வாகம் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றங்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் ஞாயிறன்று நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில், ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக, பல ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சிச் செயலாளர்கள், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், ஊராட்சி அலுவலகத்திற்கு முறையாக வருவதில்லை என்றும், கூட்டங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. கிராம மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து, அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று தீர்வு காண வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாததே இத்தகைய நிர்வாகச் சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஊராட்சி செயலாளர்களுக்கு பணிச்சுழற்சி!

மேலும், பல ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களின் பணி நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன்படி, ஊராட்சிச் செயலாளர்களை ஆண்டுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். குறிப்

பாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பணியில் ஊராட்சி செயலாளர்களாக தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதிய நபர்களுக்கு ஊராட்சிச் செயலாளர் பணிவாய்ப்புகளை வழங்க வேண்டும். இதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்தில் புதிய அணுகுமுறை உருவாகுவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என கருதப்படுகிறது.

உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்!

கிராமசபைக் கூட்டங்கள் என்பது மக்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரடியாக பதிவு செய்யும் ஜனநாயக அமைப்பாகும். ஆனால், கிராமசபைகளில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்வது உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தலைத் தாமதமின்றி நடத்தி மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிச் செயலாளர்களின் பணிச்சுழற்சியை முறைப்படுத்தி, அலுவலக வருகை மற்றும் மக்கள் குறைதீர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். கிராமசபைகளில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் புகார்கள் மீது காலக்கெடுவுடன் நடவடிக்கை எடுப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகஉள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.