முந்தய பக்கம்

முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

22 Jun 2026, 1:28 am
முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே  உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
<p><strong>முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட் டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிப்பட்டு - புதுப்பட்டு இடையே முஸ் குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் இல்லா ததால் பொதுமக்கள், விவ சாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். விவ சாயம் நிறைந்த இப்பகுதி யில் அறுவடை செய்யப் படும் பயிர்களைப் புதுப் பட்டு, சங்கராபுரம், கள்ளக் குறிச்சிக்குக் கொண்டு செல்ல, மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் போது 15 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மேலும், பள்ளி மாணவர் கள் புதுப்பட்டு அரசு மேல் நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் நிலை உள்ளது. முன்னதாக, இப்பகுதி யில் பாலம் அமைக்க எம்.எல்.ஏ. வசந்தம் கார்திகே யன் வாக்குறுதி அளித்து அளவீட்டுப் பணிகளும் நடந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் பணி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி யாக உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram