தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

14 Jul 2026, 1:16 am
மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு  நிலையம் அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை
<p><strong>மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை</strong></p><p>மூங்கில்துறைப்பட்டு, ஜூலை 13- கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மாவட்டங்களின் மையப்பகுதியான மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலை யம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சிரமப்படும் கிராம மக்கள் மூங்கில்துறைப்பட்டைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. இப்பகுதி யில் தீ விபத்து ஏற்பட்டால், 18 முதல் 25 கி.மீ. தொலைவில் உள்ள சங்கரா புரம், தண்டராம்பட்டு அல்லது திரு வண்ணாமலையில் இருந்துதான் தீய ணைப்பு வாகனங்கள் வரவேண்டும். தீய ணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிடுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகளில் தாமதம் தென்பெண்ணையாறு மற்றும் முஸ்குந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், மீட்புப் பணிகளுக்கும் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு நீண்ட நேரம் ஆவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைந்தால், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராம மக்கள் பயன்பெறுவர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, மூங்கில்துறைப்பட்டில் உடனடியாகத் தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.