மாதப்பூர் சுங்கச் சாவடியில் விவசாயிகளுக்கு கட்டண விலக்களிக்க கோரிக்கை
28 Nov 2025, 2:28 pm
<p><strong>மாதப்பூர் சுங்கச் சாவடியில் விவசாயிகளுக்கு கட்டண விலக்களிக்க கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், நவ.28 - மாதப்பூர் சுங்கச் சாவடியில், விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவ சாயிகளுக்கு முழுமையாக விலக்க ளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி நவ.27 ஆம் தேதி முதல் செயல்பாட் டுக்கு வந்தது. மேலும், இதில் ஜீப், வேன் அல்லது இலகுரக மோட்டார் வாக னங்களுக்கு ஒரு பயண கட்டணம் ரூ.80, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.120, 50 பயணங்களுக்கான மாதாந் திர கட்டணம் ரூ.2,690, திருப்பூர் மாவட்ட பதிவு எண் உள்ள வணிக வாகனங்க ளுக்கான கட்டணம் ரூ.40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனம் அல்லது மினி பேருந்துகளுக்கு ஒரு பயண கட்டணம் ரூ.130, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.195, 30 பயணங்க ளுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.4,350, திருப்பூர் மாவட்ட பதிவு எண் உள்ள வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.65. பேருந்து மற்றும் டிரக் ஆகிய வாகனங்களுக்கு ஒரு பயண கட்டணம் ரூ.275, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.410, 50 பயணங்களுக்கான மாதாந் திர கட்டணம் ரூ.9,115 திருப்பூர் மாவட்ட பதிவு எண் உள்ள வணிக வாகனங்க ளுக்கு ரூ.135. மேலும், சுங்கச் சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக் கும் மக்களின் வணிகம் சாரா வாக னங்களுக்கு 2025-26-ஆம் நிதி ஆண்டுக் கான மாதாந்திர கட்டணம் ரூ.340 என நிர் ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் விவ சாய விளை பொருட்களை எடுத்து செல் லும் வாகங்கனங்ளுக்கு முழுமையாக விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் சிலர் கூறுகையில், தேசிய நெடுஞ் சாலையில் இருக்க வேண்டிய அடிப் படை கட்டமைப்புகளை ஏற்படுத்தா மல் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சாலையில் மேலும் தார் ஊற்றியுள்ளனர். இந்த சாலை யில் கழிப்பிடம், நிழற்குடை, அவசர சிகிச்சை மையம் என எதுவும் இல்லை. மேலும் பல்லடத்தில் இருந்து இந்த சுங்க சாவடிக்கு வருவதற்குள் 4 சிக் னல்கள் உள்ளன. மேம்பாலங்கள் இல் லாததால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப் புள்ளது. மேலும் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய தொழில்களை சார்ந்துள்ளது. குண்டடம், மேட்டுக் கடை, கெங்கநாயக்கன்பாளையம், காட்டூர், தொட்டப்பட்டி, பொங்கலூர், கள்ளி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் விளை வித்த பொருட்களை திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த வழி யாகத்தான் எடுத்து செல்ல வேண்டும். பொங்கலூர் ஊராட்சிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூட்டு சேர்ந்து வண் டியை வாடகைக்கு எடுத்து விளைபொ ருட்களை எடுத்து வருவார்கள். இவர்க ளுக்கு மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் செலவு அதிகமாகும். எனவே விளைபொருட் களை எடுத்து செல்லும் அனைத்து விவ சாய வாகனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.</p>
