பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு நியாயமாக தேர்தல் நடத்த கோரிக்கை
23 Feb 2026, 5:35 pm
<p><strong>பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு நியாயமாக தேர்தல் நடத்த கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், பிப்.23 - பாரதிநகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியி ருப்பு சங்கத்திற்கு சட்டப்படி நியாய மான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் மனு நீதி நாள் கூட்டம் திங்களன்று நடைபெற் றது. இதில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழுவினர் அளித்த மனுவில், இப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கு அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த சிலர் அளித்த மனுவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம், பாரதிநகர் திட்டப் பகுதி 1 சங்கத்தின் தேர்தல் முறைப்படி நடை பெற வேண்டும். பொதுக்குழுக் கூட் டம் கூட்டி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் முறை சட்டத்திற்குப் புறம் பானது. நியாயமான தேர்தல் நடத்த வேண்டும் என கோரியுள்ளனர். நல்லூர் நுகர்வோர் நலமன்றம் திருப்பூர் மாநகர போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் நிழல்பந்தல் அமைக்க கேட்டுக் கொண்டுள்ளது. குருவாயூரப்பன் நகர் பகுதி மக் கள் அளித்த மனுவில், அங்கு முறை யாக குடிநீர் விநியோகம் செய்வ தில்லை.எனவே, சீராகக் குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும் என கோரி யுள்ளனர். காங்கேயம் வட்டத்தில் கல்குவா ரிகளில் இருந்து அதிக எடையுடன் வாகனங்கள் பஞ்சாயத்து சாலைக ளில் ஆபத்தான முறையில் ஓட்டு கின்றனர். பொதுச் சொத்துக்கு சேதாரம் விளைவிப்பதாக வழக்கு பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.</p>
