ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தல்
1 Mar 2026, 5:56 pm
<p><strong>ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தல்</strong></p>
<p>கோவை, மார்ச் 1- ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம், கரியாம் பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலை வர் மூ.மணிமேகலை தலைமை வகித் தார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர்கள் சா.டேவிட் ராஜன், கு.சுதா ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்டச் செயலாளர் ப.வீராசாமி வரவேற்றார். மாநில பொதுச்செயலா ளர் ச.மயில், பொருளாளர் தா.கணே சன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களை களைந்து, ஒன்றிய அரசு ஆசிரி யர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 நடை முறைக்கு வருவதற்கு முன்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும். ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:243ஐ ரத்து செய்ய வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 8 ஆம் தேதியன்று எட்டயபுரத்தில் நடை பெறும் பெண்ணாசிரியர்கள் சிறப்பு மாநில மாநாட்டில் போராட்ட பிரகட னம் செய்வது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. முடிவில், துணை பொதுச் செயலாளர் தே.முருகன் நன்றி கூறி னார்.</p>
