தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொட்டள்ளா ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட மக்கள் கோரிக்கை

24 Sept 2026, 2:15 am
தொட்டள்ளா ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட மக்கள் கோரிக்கை

தொட்டள்ளா ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி,செப்.23-அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வட்டங்களிலும், தளி, குந்துக்கோட்டை உள்ளிட்ட மலைப் பகுதிகள் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.கடந்த மூன்று நாட்களாக இப்பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் காய்கறி மற்றும் ராகி பயிர்கள் துளிர்விட்டு செழித்துள்ளது.

பெட்டமுகிலாளம், அய்யூர், தடிகல், மஞ்சுமலை, சாலிவரம், அருளா ளம்,குந்துக்கோட்டை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது.இதில் பெட்டமுகிலாலம் ஊராட்சி நடுநிலை பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. கணக்கற்றமரங்கள் ஒடிந்தும் சாய்ந்து விழுந்துள்ளது.

அய்யூர் வனப்பகுதியில் பெய்த கனமழையால் நமிலேரி ஏரி முழு கொள்ள ளவை எட்டி உபரி நீர் வெள்ளமாக தடிகல் சிற்றணைக்கு சென்றது. இதன்காரண மாக அஞ்செட்டி தொட்டள்ளாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வனப்பகுதிகள் வழியாக சென்றுராசி மணல் பகுதியில் ஓகேனக்கல் ஆற்றில் கலந்து செல்கிறது.அதிக மழை பெய்யும் நேரங்களில் தொட்டள்ளா காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீணாக காவேரிஆற்றில் கலக்கிறது.60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆற்றில் அணைகட்ட கோரிக்கை விடுத்த நிலையில் அப்போதிருந்த அரசு அணைகட்ட முடிவு செய்யப்பட்ட பிறகு ஏனோ இதுவரை கைவிடப்பட்டுள்ளது. தொட்டள்ளா ஆற்றில் அணை கட்டப் பட்டுவீணாக ஆற்றில் கலக்கும் நீர் தேக்கப்பட்டாலே கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள அஞ்செட்டி வட்டத்தில்குடிநீருக்கும், நிலத்தடி நீராதாரத்திற்கும் நிரந்தரமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே மழைக்காலத்தில்நீரை தேக்கி வைத்து பயன்படுத்த தொட்டள்ளா ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என அழைத்துபொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.