தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருவழி சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

10 Dec 2025, 4:08 pm
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருவழி  சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
<p><strong>திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருவழி சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்</strong></p> <p>திருவள்ளூர், டிச.10- திருவள்ளூர் மாவட்டம், திரு நின்றவூர் ரயில் நிலையம், பெரியார் நகர் பகுதியில் புதிய இருவழி சுரங்கப்பாதை அமைக்கக் கோரி, (சிபிஎம்) தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட முதுநிலை மேலாளர் அங்கித் வர்மாவிடம் புதனன்று (டிச.10) மனு அளித்தனர். திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட 13 முதல் 17 வரையிலான வார்டுகளில் வசிக்கும் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள், பள்ளி/கல்லூரி மாணவர்கள் ரயில்வே சுரங்கப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வேயின் மழைநீர் வடிகாலாக (சிறு கல்வெட்டு எண் 97) 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சுரங்கப்பாதை வெறும் 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டது. மழைக்காலங்களில் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் 4 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. விரைவு ரயில்கள் செல்லும்போது மேற்கூரையில் இருந்து சிதிலங்கள் கொட்டுகின்றன; மழைநீர் அருவி போல கசிகிறது. மக்கள்தொகை அடர்த்தி அதிகரிப்பால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் படும் சிரமங்களைக் களைய, சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி, திரு வள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சசிகாந்த்செந்தில் மூலமாகவும், ரயில்வே அதிகாரிகளிடமும் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன: திருநின்றவூர் பெரியார் நகர் அருகில் மக்கள் பயன்படுத்தும் வகையிலான மின்விளக்குகளுடன் கூடிய புதிய இருவழி சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். திருநின்றவூர் ரயில் நிலை யத்தின் இருபுறங்களிலும் நகரும் படிக்கட்டுகள் &nbsp;அமைக்க வேண்டும். நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் மிகவும் தாழ்வாக உள்ள சுரங்கப் &nbsp;பாதையைச் சீரமைத்து, மழை நீர் தேங்காமல் தடுக்கவும், மின்விளக்கு கள் பொருத்தவும் வேண்டும். மனுவை அளித்த குழுவில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.மோகனா, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ. பச்சையம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் என். ஜெய ராமன், சிஐடியு மாவட்ட நிர்வாகி எம்.ராமசாமி, சென்னை ஐசிஎஃப் செயல் தலைவர் பி. ராஜாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ரயில்வே முதுநிலை மேலாளர் அங்கித் வர்மா, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.