தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊத்துக்குளி வெண்ணெய் தொழிலை மீட்டெடுக்க ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கக் கோரிக்கை

14 Feb 2026, 4:33 pm
ஊத்துக்குளி வெண்ணெய் தொழிலை மீட்டெடுக்க ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கக் கோரிக்கை
<p><strong>ஊத்துக்குளி வெண்ணெய் தொழிலை மீட்டெடுக்க ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கக் கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், பிப்.14 - புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்தித் தொழிலை மீட்டெ டுக்க, பொருட்கள் மற்றும் சேவை வரியை &nbsp;(ஜிஎஸ்டி) முற்றிலுமாக நீக்க வேண்டும் என்ற &nbsp;கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், &nbsp;இத்தொ ழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வும், வட்டியில்லா கடன் உதவி அளிக்கவும் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் பாரம்பரிய வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்திக்கு பெயர் போன &nbsp;ஊத்துக்குளியில், தற்போது நிறுவனங்க ளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. &nbsp;முன்பு நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது 30 க்கும் &nbsp;குறைவான நிறுவனங்களே உற்பத்தியில் ஈடு பட்டு வருகின்றன. உற்பத்தியாளர்கள், உற் பத்தி குறைவதற்கு ஜிஎஸ்டி வரியே முக் கியக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, வி.எஸ்.பி. டெய்ரி உரிமை யாளர் பொன்னுசாமி கூறியதாவது: ஊத்துக் குளி பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப் படும் வெண்ணெய் மற்றும் நெய், தமிழ்நாடு &nbsp;மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கப்படுகிறது. பாலைக் காய்ச்சி, அதிலிருந்து &nbsp;கிரீம் பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் வெண் ணெய் தயாரிக்கப்படுகிறது. அந்த வெண் ணெயிலிருந்து நெய் எடுக்கப்படுகிறது. தற் போது எருமை வெண்ணெய் 15 கிலோ டின் ரூ. &nbsp;8,400 க்கும், நெய் கிலோ ரூ.800 வரையி லும், தயிர் 35 லிட்டர் கேன் ரூ.950 க்கும் &nbsp;விற்கப்படுகிறது. முன்பு நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருந்த நிலையில், இன்று 30 க்கும் குறைவான நிறுவனங்களே உள்ளன. கால்நடை வளர்ப்பு குறைவு, ஜிஎஸ்டி வரி &nbsp;உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற் பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்ப டுத்தப்படுவதற்கு முன்பு, நாங்கள் தமிழ்நாடு &nbsp;முதல்வரை சந்தித்து மாநில அரசு விதித்த &nbsp;வரியை நீக்கக் கோரினோம். அப்போது அந்த &nbsp;வரி முழுமையாக நீக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, தற்போது 5 &nbsp;சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த &nbsp;குறைக்கப்பட்ட வரியின் பயனை நாங்கள் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே வழங்கினோம். எனவே, முன்பு இருந்ததை போல வரியை முழுமையாக நீக்கினால், ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்தி மேம்படும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என்றார். கால்நடை தீவங்களுக்கு மானியம் வழங்கக் கோரிக்கை: ஊத்துக்குளி பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், மக்காச்சோள தட்டுகள், தவிடு, எண்ணெய் புண்ணாக்கு, சோளம் வைக்கோல் மற்றும் வறட்சியைத் தாங்கும் புற்கள் ஆகியவற்றைக் கொண்ட சத்தான தீவனத்தை உண்ணும் எருமைகளின் பாலில் இருந்தே அசல் ஊத்துக்குளி வெண் ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால், &nbsp;இப்பகுதியில் மழை அளவு குறைந்துள்ள தால் கால்நடை வளர்ப்பு வெகுவாகக் குறைந் துள்ளது. குறிப்பாக, இங்கு அதிகம் வளர்ந்து &nbsp;வந்த கொலுக்கட்டைப் புல் தற்போது முற்றி லுமாக அழிந்து விட்டது. மேலும், தீவனங்க ளின் விலை உயர்வும் பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தியுள்ளது. எருமைப் பாலின் கொழுப்புச் சத்து (அடர்த்தி) அதிகம் என்பதால், பால் பொருட் கள் தயாரிக்கும் நிறுவனங்கள் எருமைப் பாலை கொள்முதல் செய்யவே விரும்பு கின்றன. ஆனால், எருமைகள் சீசன் காலங்க ளில் 6 மாதங்கள் வரை பால் தருவதில்லை. &nbsp;மாடுகள் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியாகப் பால் தரக்கூடியவை. எனவே, விவசாயிகள் மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஊத்துக்குளியில் 10 க்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது தண்ணீர் இருப்பு உள்ளது. அரசு மானிய விலையில் தரமான தீவனம் வழங்கினால், கால்நடை வளர்ப்பை அதிகரித்து, இப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் &nbsp;என்றனர். எப்போது வரும் வெண்ணெய் உற்பத்தி மையம்? ஊத்துக்குளியில் நெய் மற்றும் பிற மதிப்பு &nbsp;கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்ப தற்கான ஆவின் தொழிற்சாலை அமைக்கப்ப டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் &nbsp;உடுமலைப்பேட்டைக்கு வருகை புரிந்த முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ.6.5 கோடி &nbsp;நிதி ஒதுக்கியுள்ளதாகவும், நில அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இன் னும் அத்திட்டப் பணிகள் தொடங்கப்படாத நிலையில், உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.