சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
13 Jul 2026, 12:30 am
<p><strong>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்</strong></p><p>சேலம், ஜூலை 12- தமிழ்நாட்டில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இரா.அதியமான் வலியுறுத்தி யுள்ளார். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையாகவே உள்ளது. இந்நிலையில், ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் திருவா கவுண்ட னூரில் ஞாயிறன்று நடைபெற்றது. அமைப்பின் நிறு வனத் தலைவர் இரா.அதியமான் தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில் துணை பொதுச்செய லாளர் தமிழரசு, தலைமை நிலைய செயலாளர் வீர வேந்தன் மற்றும் நாமக்கல், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதியமான், அண்டை மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உள் ஒதுக்கீடு நியமனம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆதிதிராவிடர் என்பது தனிப்பட்ட சாதி என்பதை குறிப்பதால், ஒட்டுமொத்த ஆதிதிராவி டர் நலத்துறையும் சமூக நீதித்துறை என மாற்றம் செய் யப்பட வேண்டும், என்றார்.</p>
