தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வு பெற்ற காவல் ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டத்தில் கோரிக்கை

21 Dec 2025, 3:21 pm
ஓய்வு பெற்ற காவல் ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை  ரூ.2 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டத்தில் கோரிக்கை
<p><strong>ஓய்வு பெற்ற காவல் ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை &nbsp;ரூ.2 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டத்தில் கோரிக்கை</strong></p> <p>தஞ்சாவூர், டிச.21- &nbsp;ஓய்வு பெற்ற காவல் ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்க 17 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். &nbsp;கூட்டத்தில் ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரத்தினவேல், ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வன் , சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கொள்கை பரப்புச் செயலாளர் ஜி.ஜெயராமன் வரவேற்றார். செயல் தலைவர் அப்துல் காதர் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமராஜ் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாவட்டச் செயலாளர் மகேசன் தீர்மான உரை வாசித்தார். &nbsp;ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அல்மாஸ் அலி வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் ஆலோசனை குழு தலைவர் தவமணி, மருத்துவர் சாந்தி, &nbsp;மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மாநில கூட்டமைப்பு தலைவர் வேலுச்சாமி விழா பேருரை வழங்கினார். கும்பகோணம் உட்கோட்ட தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி தெரிவி்த்தார். ஓய்வூதியர்களுக்கான குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி ரூ. 300 ஐ, ரூ.1000 ஆக உயர்த்தி ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதைப் போல் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.