டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் சுதந்திர தின விழா
17 Aug 2026, 10:32 pm

டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் சுதந்திர தின விழா

பாபநாசம், ஆக. 17- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில், சுதந்திர தினத்தையொட்டி, அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை தலைவர் ஹிதாயத்துல்லா ஏற்றினார்.

இதில், உதவி ஆளுநர் அன்பு சீனிவாசன், செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் ஷாஜகான் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போன்று, பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் சிக்கந்தர் பாட்சா தேசியக் கொடியை ஏற்றினார்.

பாபநாசம் அருகே ராஜகிரி இமயம் மழலையர், தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் தலைவர் நிவேதா ஏற்றினார். இதில் இளவரசி, நிருவாகச் செயலர் கலிய மூர்த்தி, கிளப்பின் சாசனத் தலைவர் தில்லை நாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.