உணவுப் பாதுகாப்பின் மீதான தாக்குதல்: டெல்டா நெல் தேக்கத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? - கே.ஜி.ரகுராமன்
16 Jul 2026, 9:38 pm

உணவுப் பாதுகாப்பின் மீதான தாக்குதல்: டெல்டா நெல் தேக்கத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? - கே.ஜி.ரகுராமன்

“நாங்க பாடு பட்டு விளைவிச்ச நெல் மணிகள், இன்னைக்குக் கிடங்குல கிடந்து அழுகுறதைப் பார்த்தா, தாங்க முடியாத அளவுக்கு வலிக்குதுங்க...”

- இது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் வேத னைக் குரல். தமிழகத்தின் நெற் களஞ்சியமாகத் திகழும் டெல்டா மாவட்டங்களில், சுமார் 10 லட்சம் டன் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பது அரசின் நிர்வாகத் தோல்வியையும், உழைக்கும் மக்களின் மீதான அலட்சியத்தையுமே பறைசாற்றுகிறது.

அழுகல் களமாகும் கிடங்குகள் கொள்முதல் செய்யப்பட்ட நெல், கிடங்குகளில் தேங்காமல் உட னுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்தச் சங்கி லித்தொடர் அறுந்து போனதால், இன்று கிடங்குகள் “அழுகல் கள மாக” மாறியுள்ளன.

டெல்டா மாவட்ட ங்களின் தற்போதைய நெல் தேக்க விபரம்: மாவட்டம் தேக்கமடைந்துள்ள நெல் அளவு (மெட்ரிக் டன்னில்) தஞ்சாவூர் 3.23 லட்சம் திருவாரூர் 2.56 லட்சம் மயிலாடுதுறை 1.80 லட்சம் நாகப்பட்டினம் 1.35 லட்சம் புதுக்கோட்டை 1.00 லட்சம் மொத்தம் 9.94 லட்சம் மெட்ரிக் டன் சுமார் 2,400 கோடி ரூபாய் மதிப்பி லான இந்த நெல் மூட்டைகள், வெயி லிலும் மழையிலும் நனைந்து அழு கிக் கொண்டிருப்பது, தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

காகிதத்தில் இருக்கும் திட்டங்கள் முந்தைய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு தளங்களைக் கட்டியுள்ளதாகக் கூறி னாலும், கள நிலவரம் மாறவில்லை.

அரசு போதிய சேமிப்புக் கிடங்குகள் இன்றி, தனியார் அரிசி ஆலை அதி பர்களின் கிடங்குகளை நம்பியிருப் பது விவசாயிகளைச் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. புதிய சேமிப்புக் கிடங்கு கொள்கை யில் (2026) அறிவிக்கப்பட்ட நவீன சைலோக்கள், பசுமை மானியம், தொழில்துறை அந்தஸ்து போன்ற திட்டங்கள் பெரும்பாலும் காகிதத்தி லேயே உள்ளன.

கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த 495 கோடி ரூபாய் மதிப்பிலான 120 நவீன சேமிப்புக் கிடங்கு திட்டங்களும், களத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நிர்வாகத் தவற்றால் பணியாளர்கள் மீது பழி ஒரு நாளைக்கு 15,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலை யில், 10,000 டன் மட்டுமே ஆலை களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த 5,000 டன் போக்குவரத்து இடை வெளியை நிரப்ப அரசு எந்தப் போர்க்கால நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இதனால் ஏற்படும் எடை இழப்புக்குக் கொள்முதல் நிலை யப் பணியாளர்களைப் பொறுப்பாக்கு வதால், அவர்கள் விவசாயிகளி டம் கூடுதல் நெல் கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தீர்வுகள் நெல் மூட்டைகள் தேங்குவதைக் காட்டி எலித் தொல்லை, சேதாரம் என்று கூறி நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, ஒவ்வொரு கிடங்கின் இருப்பு விபரத்தையும் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யும் வெளிப் படையான கண்காணிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். தற்காலிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளி தில் அமைக்கக்கூடிய ‘செமி குடோன்’ வசதிகளை உருவாக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு ஊராட்சி அல்லது விவசாயக் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு மற்றும் உலர்களங்களை அமைக்க வேண்டும்.

தனியார் முதலீடுகளை விட, பொதுத்துறை சார்ந்த கட்டமைப்பு களை வலுப்படுத்துவதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும். “ஒரு நெல்மணி க்கூட வீணாகக்கூடாது” என்ற கொள்கையோடு, உழவரின் வாழ்வா தாரத்தை மீட்டெடுக்கும் உண்மை யான நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ள வேண்டும்.