முந்தய பக்கம்

பணிச்சுமையால் டெல்டா ஒப்பந்தத் தொழிலாளி தற்கொலை!

7 Oct 2026, 8:35 pm
பணிச்சுமையால் டெல்டா ஒப்பந்தத் தொழிலாளி தற்கொலை!
<p><strong>பணிச்சுமையால் டெல்டா ஒப்பந்தத் தொழிலாளி தற்கொலை!</strong></p><p>கிருஷ்ணகிரி,அக்.7-கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி குருபரப்பள்ளி சிப்காட்டில் உள்ள டெல்டா தொழிற்சாலையில் 8 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணி புரிந்த பரமக்குடியைச் சேர்ந்த நாகநாதன், கடும் பணிச்சுமை மற்றும் குறைந்த ஊதியத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் அருந்தி உயிரிழந்தார்.</p><p>தைவானைச் சேர்ந்த இத்தொழிற்சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் நிலையில், நாகநாதனுக்கு உரிய ஊதியமோ, இஎஸ்ஐஉள்ளிட்ட மருத்துவ வசதி களோ வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வறுமைச் சூழல் மற்றும்குடும்பத்திற்கு உதவ முடி யாத நிலையால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், ஓசூரில் விஷம் அருந்திதற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram