தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டெல்டா குடிநீர் பிரச்சனை குறித்து அவையில் காரசாரம்

19 Aug 2026, 9:25 pm
டெல்டா குடிநீர் பிரச்சனை குறித்து அவையில் காரசாரம்

டெல்டா குடிநீர் பிரச்சனை குறித்து அவையில் காரசாரம்

காவிரி டெல்டா மாவட்ட ங்களில் நிலவும் கடுமை யான குடிநீர் பிரச்சனை குறித்து திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லாததால் ஆற்றில் தண்ணீரை திறந்துவிட்டு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் எனவும், அந்த தண்ணீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் கோரினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

அவை முன்னவர் செங்கோட்டை யன், குடிநீர் திட்டத்திற்காக ரூ. 289 கோடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளதாகவும், கால்நடைகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக வும் தெரிவித்தார்.

வெள்ளத்தடுப்பு குறித்து கேள்வி

திமுக உறுப்பினர் துரை. சந்திரசேகர் பேசுகையில், நீர்வளத்து றைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் முந்தைய ஆண்டுகளை விட குறைவாக உள்ளதாகவும், வடகிழக்கு பருவமழைக்கு முன் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், முதலமைச்சர் தலைமையில் ஏற்கெனவே இரண்டு முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துரை சந்திரசேகர், காவிரி விவகாரத்தில் தவெக அரசு மென்மையாக செயல்படு வதாகவும், மேகதாது அணை குறித்து கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் என். ஆனந்த், “பயப்படவில்லை, தீர்வு காண்போம்” என உறுதியாகத் தெரிவித்தார்.

“மாமா” வார்த்தையால் அவையில் நகைச்சுவை

விவாதத்தின்போது துரை சந்திரசேகர் “மாமா” எனும் வார்த்தையைப் பயன்படுத்தியபோது, துணை சபாநாயகர் ரவிசங்கர் உடனடியாகத் தலையிட்டு பெயர் குறிப்பிடு மாறு கேட்டு, அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கு வதாகத் தெரிவித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நகைச்சுவையான உரையாடல் அவையினரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.