தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர் ஆவியாவதே தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணமாம்! பாஜக ஆளும் தில்லி முதலமைச்சர் கண்டுபிடிப்பு

5 Jun 2026, 9:11 pm
நீர் ஆவியாவதே தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணமாம்! பாஜக ஆளும் தில்லி முதலமைச்சர் கண்டுபிடிப்பு

நீர் ஆவியாவதே தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணமாம்! பாஜக ஆளும் தில்லி முதலமைச்சர் கண்டுபிடிப்பு

விர கோடை காலம் துவங் கும் முன்பே பாஜக ஆளும் தில்லியில் தீவிர தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.மக்கள் அன்றாடத் தேவைக்கே அல்லல்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரம் தொடர் பாக துரித நடவடிக்கை எடுக்காமல், தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா பாஜக நிகழ்ச்சி ஒன்றில், “கோடை வெப்பத் தால் நீர் ஆவியாவதே தில்லி தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் ஆகும். கடு மையான வெயில் அடிக்கும் போது, விநியோகிக்கப்படும் தண்ணீரில் ஒரு பகுதி வழியிலேயே ஆவியாகி விடு கிறது.

இதன் காரணமாகத்தான் இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பிரச் சனையை மழுப்பியுள்ளார். தில்லி முத லமைச்சர் ரேகா குப்தாவின் இந்த விசித்தி ரமான விளக்கத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிர சாந்த் பூஷண், “நமது டீக்கடைக் காரர் (பிரதமர் மோடியை மறைமுக மாகக் குறிப்பிட்டு) பல விஞ்ஞானி களை அமைச்சர்களாகவும், முதலமைச் சர்களாகவும் உருவாக்கியுள்ளார்.

தண்ணீர்த் தட்டுப்பாடு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல்ப் பூர்வமான விளக்கத்துடன் இதோ நமது முதல்வர் ரேகா குப்தா” என்று கூறி, தில்லி முத லமைச்சர் ரேகா குப்தாவின் வீடியோ வை பதிவிட்டுள்ளார்.

அதேபோல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் வீடியோவை பகிர்ந்து, “தில்லி தண்ணீர் தட்டுப்பாடு குறித்து முத லமைச்சர் ரேகா குப்தாவின் கருத்து இது தான். முட்டாள்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?” என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.