தில்லி எஸ்ஐஆர் தனித் தொகுதிகளில் அதிக வாக்குகள் நீக்கம்
22 Sept 2026, 10:36 pm

தில்லி எஸ்ஐஆர் தனித் தொகுதிகளில் அதிக வாக்குகள் நீக்கம்

புதுதில்லிபாஜக ஆளும் தில்லியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) வரைவுப் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவுப் பட்டியலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகள்,பட்டியலினத்தவருக்கான தனித்தொகுதிகள், மறுகுடியமர்வுப் பகுதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்அதிகம் வாழும் உழைக்கும் வர்க்கக் குடியிருப்புகளிலேயே மிக அதிகளவில் பெயர்கள் விடுபட்டுள்ளதாக ஆய்வுமூலம் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ‘ஸ்பெக்ட் ரிசர்ச் அசோசியேஷன்’ அமைப்பின் முதற்கட்ட அறிக்கையின்படி, “தில்லியில் எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், முன்பு பதிவு செய்திருந்த மூன்றில் ஒரு வாக்காளரின் பெயர்இடம்பெறவில்லை. அதாவது எஸ்ஐஆர் பணிக்கு முன் தில்லியில் சுமார் 1.45 கோடி பதிவு செய்யப்பட்டவாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வரைவுப் பட்டியலில் 97.53 லட்சம்பேர் மட்டுமே உள்ளனர். அதாவது, முந்தைய வாக்காளர்களில் சுமார் 47.6 லட்சம் பேரின் (32.8%) பெயர்கள் வரைவுப்பட்டியலில் இடம்பெறவில்லை.

குறிப்பாக 12 தனித் தொகுதி உட்பட, 13 சட்டமன்றத் தொகுதிகளில் 40% அல்லது அதற்கு மேற்பட்ட விகிதத்தில் பெயர்கள் விடுபட்டுள்ளன. முஸ்லிம் மக்கள்அதிகம் வாழும் பகுதியான துக்ளகாபாத் மற்றும் ஓக்லா ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வாக்குகள் நீக்கத்தின்விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. துக்ளகாபாத்தில் அதிகபட்சமாக 47.8% பெயர்களும், அதைத் தொடர்ந்துஓக்லாவில் 45.2%, ஆர்.கே. புரமில் 44.4%, கஸ்தூரிபா நகரில் 43.9%, கல்காஜியில் 42.7% மற்றும் பதர்பூரில் 42.5% என்றவிகிதத்திலும் பெயர்கள் விடுபட்டுள்ளன. புதுதில்லி, ஜங்புரா,மெஹ்ராலி, படேல் நகர், சங்கமம் விஹார், கரோல்பாக் மற்றும் பட்பர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் குறைந்தது 40% வரை பெயர்கள் விடுபட்டுள்ளன. விடுபட்டபெயர்களில் 91% பெயர்கள் “இங்கில்லை / இடம்பெயர்ந்துவிட்டார்கள்” (Absent/Shifted) என்ற பிரிவின் கீழ்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அசாதாரணமாக அதிக பெயர் நீக்கம்நடந்துள்ள பகுதிகளில் சுதந்திரமான மறுசரிபார்ப்பு நடத்த வேண்டும். மேலும் விடுபட்ட பெயர்களைச் சேர்க்க வெளிப்படையான மேல்முறையீட்டு நடைமுறையைத் தேர்தல் ஆணையம் உருவாக்கவேண்டும்” என அறிக்கை வலியுறுத்துகிறது.