தீக்கதிர் முக்கிய செய்திகள்
21 Jul 2026, 8:48 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கரப்பான் பூச்சி கட்சி

தில்லியில் ஆண் காவலர்களால் தாக்கப்பட்ட பெண் மாணவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்குக் காரணமான ஒருவரைக் (கல்வி அமைச்சர்) காப்பாற்ற, மோடி அரசு மாணவர்களை மேலும் ரத்தம் சிந்த வைக்கிறது.

திரைக்கலைஞர் பிரீத்தி ஜிந்தா

நம் கல்வி முறையை மேம்படுத்தவும், உயர்த்தவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு மாணவருக்கும், சோனமுக்கும் என் உறுதியான, மனமார்ந்த ஆதரவை அளிக்கிறேன். சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளுங்கள் சோனம், இந்த போராட்டத்தைப் போல உங்கள் உயிரும் முக்கியம்

ஆம் ஆத்மி

இந்த நாட்டின் மிகப்பெரிய தேசவிரோதி நீங்கள்தான் மோடி. ஒரு வினாத்தாள் கசிவைக் கூடத் தடுக்க முடியாத கையாலாகாதவராக அவர் இருக்கிறார். இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல. மிரட்டுவதை நிறுத்துங்கள். சொந்த நாட்டின் குழந்தைகள் மீதான கொடூரத் தாக்குதல் வெட்கக்கேடானது.

திரைக்கலைஞர் டொவினோ தாமஸ்

ஒரு தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கும்போது, அவர்களின் குரல்கள் அடக்குமுறை சக்தியால் நசுக்கப்படும்போது, அந்த எதிர்காலமே நசுக்கப்படுகிறது. நம் நாட்டில் நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும், எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.