கல்வியைக் காக்க தில்லியில் மாபெரும் எழுச்சி நீட் ஊழலுக்கு எதிரான மாணவர் - இளைஞர் கடலையும், மோடி அரசின் அடக்குமுறையையும் சந்தித்த தலைநகரம்!
20 Jul 2026, 8:35 pm

கல்வியைக் காக்க தில்லியில் மாபெரும் எழுச்சி நீட் ஊழலுக்கு எதிரான மாணவர் - இளைஞர் கடலையும், மோடி அரசின் அடக்குமுறையையும் சந்தித்த தலைநகரம்!

புதுதில்லி, ஜூலை 20 — மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ஜனநாயகத்தின் கோவி லான நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை மக்கள் சேவைக்காக அல்ல, மாறாக மக்களைத் தடுப்பதற்காகத் திறக்கப்பட்டிருந்தது. எஃகு தடுப்பு கள், தண்ணீர் பீய்ச்சி வாகனங்கள், மற்றும் கையில் தடிகளுடன் நின்று கொண்டிருந்த தில்லி காவல் படை, இந்திய ஜனநாயகத்தின் முகப்பில் இளைய தலைமுறையை முற்றுகை யிட்டிருந்தது. தங்கள் வலியைத் தவிர வேறெதையும் சுமந்து வராத, நிரா யுதபாணியான பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பாதையில் நடக்க முற்பட்ட போது, தில்லி காவல்துறை அவர் களைப் பேச்சுவார்த்தை மூலம் வர வேற்கவில்லை, மாறாகக் கொடூர மான தடிகளாலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளாலும் வரவேற்றது.

மோடி அரசுக்கு ஜூலை 20 அன்று ஒரு தேர்வு இருந்தது. இந்தியா வின் தேர்வு முறையைச் சிதைத்து, பல்லாயிரக்கணக்கான குழந்தை களின் கனவுகளைச் சுட்டெரித்து, அவர்களைத் தற்கொலைக்குத் தள் ளிய கல்வி ஊழலுக்கு எதிராக எழுந்த தலைமுறைக்கு, ஜனநாயகத்தின் கதவுகளைத் திறந்திருக்கலாம். ஆனால், பாஜக ஆட்சியாளர்கள் தேர்ந் தெடுத்தது தடியடியை. கண்ணீர்ப் புகையை. இணையத்தை முடக்கி, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடி, ஒட்டுமொத்தத் தலைநகரையும் சொந்த நாட்டு இளைஞர்களுக்கு எதி ரான ஒரு கோட்டையாக மாற்றினார்கள். அவர்கள் பேச வந்தனர். அரசு அவர்களுக்குத் தடிகளையும் அடக்கு முறையையும் பரிசளித்தது.

ஜந்தர் மந்தரில் எழுந்த மாணவர் கடல்

ஜூலை 20 திங்கள் விடியற்காலை யிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் போராட்டக் களம் மாண வர்களால் நிரம்பி வழிந்தது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் மகாராஷ்டிரா எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்களிலும், பேருந்துகளிலும் இரவெல்லாம் பயணித்து வந்த இளை ஞர்கள், சோர்வை மீறித் தங்கள் கோப த்தைப் பதாகைகளாக ஏந்தி நின்றனர்.

இந்த எழுச்சியின் பிரம்மாண்டம் பலரையும் அதிரவைத்தது. ஒரு செய்தி நிறுவனம் 10,000-க்கும் மேற்பட்டோர் அணிவகுத்ததாக கூறிய நிலையில், ‘தி வயர்’ ஊடகம் ஜந்தர் மந்தரில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்டோர் கூடியதாக கணித்தது. இது கடந்த பல ஆண்டுகளில் தில்லி கண்டிராத மிகப்பெரிய மாணவர் அணிதிரட்டலாகும். ‘சலோ சன்சாத்’ (நாடாளுமன்றத்தை நோக்கி) என்ற முழக்கத்துடன், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் திரண்டனர்.

தடியடி: ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை

காலை 11 மணிக்கு, மாணவர்கள் நாடாளுமன்ற வீதியை நோக்கி முன்னேறியபோது, காவல்துறை தன் அடக்குமுறை யைத் தொடங்கியது. சமூக வலைதளங்க ளில் பரவிய காணொலிகளில், காவல்துறை தடி களால் மாணவர்களின் முதுகிலும் தோள்களி லும் தாக்கும் காட்சி பதிவாகியிருந்தது. மத்திய ரிசர்வ் காவல்படையினரும், தில்லி காவல்துறை யினரும் இணைந்து மாணவர்களை கொடூர மாகத் தாக்கினர். அரசியல் சாசனமன்றம், படேல் சவுக், கேரளா இல்லம் மற்றும்சாஸ்திரி பவன் அருகே கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

இந்தக் கொடூரத்தின் உச்சமாக, அமைதி யான முறையில் போராடிய மாணவர்கள் மீது, குறிப்பாகப் பெண்கள் மீதும் தடியடி நடத்தப் பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் தில்லி பல்கலைக்கழகச் செயல்பாட்டாளர் ‘ராவின்’ என்பவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மேலும் பலர் கழுத்து, முதுகு மற்றும் கால்களில் காயமடைந்ததாகவும், ஒரு மாணவரின் தோள்பட்டை இடப்பெயர்ச்சி அடைந்ததாகவும் ஏஐஎஸ்ஏ அமைப்பு குற்றம் சாட்டியது. தில்லி காவல்துறை சமூக வலைதளத்தில், “எந்த வன்முறையும் நடக்க வில்லை, போராட்டம் கண்ணியமாக கையா ளப்பட்டது” என்று பதிவிட்டது. ஆனால், பாதிக் கப்பட்ட மாணவர்களின் இரத்தமும், காயங்க ளும் அந்தப் பொய்யைப் பகிரங்கமாக அம்ப லப்படுத்தின.

காயமடைந்தவர்களும், கைது செய்யப்பட்டவர்களும்

இந்த மாபெரும் போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினால் ஈர்க்கப்பட்டவர்க ளும், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் முன்னணியில் நின்றன. ஜூலை 20 அன்று மாலை வெளி யிடப்பட்ட அறிக்கையில், இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா ஆகியோர் காயமடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தோழர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

அப்துல் வஹாப் (உத்தரப் பிரதேசம் - மாநி லத் தலைவர்), முகேஷ் (மாநிலத் துணைத் தலை வர்) மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சமீர் (கையில் எலும்பு முறிவு), தில்லி தோழர்கள் அன்ஷில், ஜையத், அமித் மற்றும் துர்கேஷ் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வாலி பர் சங்க தில்லி மாநிலச் செயலாளர் அமன் சைனியும் காயமடைந்தார். கைது செய்யப்பட்ட வர்களில் ஜேஎன்யு மாணவர் பேரவை துணைத் தலைவர் கோபிகா, தில்லி பல்கலைக் கழக கலைப் பீடத்தின் முன்னாள் பொருளாளர் சரண்யா, மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகி மற்றும் யஷிதா ஆகியோர் அடங்கு வர். ஆயினும் “இந்த ஊழல் அமைச்சரை நீக்கி, 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர்ப்பலிக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் பின்வாங்கப் போவ தில்லை” என்று இந்திய மாணவர் சங்கம் ஆவேசமாக அறிவித்தது.

இந்த எண்ணிக்கை வெறும் எண்கள் அல்ல, ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத் தின் சிதைவு. இவர்களின் போராட்டம் என்பது வெறும் தேர்வு பற்றியது அல்ல; இந்தியாவின் கல்வி அமைப்பை கார்ப்பரேட்மயமாக்கி, தகுதியான மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் அநீதிக்கு எதிரான போர்.

முற்றுகையிடப்பட்ட தலைநகரம்

மாணவர்களின் போராட்டத்தை நசுக்க, ஒட்டுமொத்த தில்லியையும் முடக்கியது அரசு. இணைய சேவை துண்டிக்கப்பட்டது, ராஜீவ் சவுக், ஜனபத், படேல் சவுக், மத்திய செய லகம் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ ரயில் நிலை யங்கள் மூடப்பட்டன. பிரிவு 163-ன் கீழ் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தலைநகரம் ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டது. 12 கம்பெனி அள விலான துணை ராணுவப் படைகள் குவிக்கப் பட்டன. இதன் விளைவாக, அன்றாடப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தில்லி போன்ற ஒரு பெருநகரத்தில், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு என்பது அடிப்படை உரிமை. ஆனால், ஒரு அமைச்சர் தனது நாற்காலியைப் பாதுகா த்துக் கொள்ள, ஒட்டுமொத்த நகரத்தையே பணயக் கைதியாக மாற்றியது வெட்கக்கேடான செயலாகும். தில்லியின் வீதிகள் காவல்துறை பூட்ஸ் கால்களின் சத்தத்தாலும், கண்ணீர்ப்புகை யின் நெடியாலும் நிறைந்திருந்தன.

அதிகாரமும் மக்கள் எழுச்சியும்

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரித் தலைவர்கள் களம் இறங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் விஜூ கிருஷ்ணன், அருண் குமார் மற்றும் மரியம் தாவ்லே உள்ளிட்டோர் மாணவர்களுடன் அணிவகுத்து நின்றனர். “மோடி எப்போது அஞ்சு கிறாரோ, அப்போதெல்லாம் காவல்துறையை ஏவி விடுகிறார்” என்று சிபிஐ(எம்) மத்தியக் குழு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அதிஷி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி எம்.பி., சந்திரசேகர் ஆசாத் உள் ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவு தெரிவித்தனர். திரைக்கலை ஞர்கள் பிரகாஷ் ராஜ், சபானா ஆஸ்மி ஆகி யோரும் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். சமாஜ்வாதி கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ், “ஜனநாய கத்திற்கு இது ஒரு கறுப்பு நாள்” என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சித் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, மாணவர் போராட் டத்தை நசுக்குவதைக் கடுமையாகக் கண்டித் தார். காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி வத்ரா, “நாங்கள் விவாதம் நடத்தக் கேட்கிறோம், நீங்கள் கண்ணீர்ப்புகையை வீசுகிறீர்கள். அவர்கள் நம் குழந்தைகள்” என்று கொதித்தார். சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்ய தாக்கரே, “இது ஒரு கோழைத்தனமான ஆட்சி” என்றார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்கத் தயாராக இல்லை.

உரையாடல் அல்ல, அடக்குமுறை

நீட் தேர்வு ஊழல் என்பது வெறும் தேர்வு முறையின் தோல்வி அல்ல, அது ஒரு தலை முறையின் நம்பிக்கையைச் சிதைத்த செயல். மே 3, 2026 அன்று நடைபெற்ற இந்தத் தேர்வில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகள் அம்பலமான பிறகு, மே 12-ல் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ல் மீண்டும் தேர்வு நடத்தப் பட்டது. ஆனால், இந்த ஊழல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 20-க்கும் மேல் என்று மாண வர் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு தேர்வுக் காகக் குழந்தைகள் உயிரை மாய்த்துக்கொள் ளும் நிலை உருவானது? இதற்குப் பொறுப் பான தேசிய தேர்வு முகமை(NTA)மற்றும் கல்வி அமைச்சகம், இந்தத் தோல்வியை ஏற்றுக் கொண்டு பதவி விலக மறுக்கிறது என்பதே போராட்டத்தின் அடிப்படை பிரச்சனை. மாணவர் அமைப்புகளான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ சார்பில் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து, மேற்கண்ட கோரிக்கைகளுடன், சோனம் வாங்சுக்கின் விடுதலை, தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரினர். ஆனால், எந்த உறுதி மொழியும் அளிக்கப்படவில்லை. அதே வேளை யில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, மாணவர்களை ஒடுக்கும் திட்டங்களிலேயே முனைப்பு காட்டினாரே தவிர, மாணவர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை.

ஒரு வரலாற்றுத் தருணம்

பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மாண வர்கள், மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு களைக் கடந்து, ஒரு ஒற்றை இலக்கை நோக்கி அணிவகுத்தது, இந்தியாவின் பன்முகத்தன்மை இன்னும் உயிருடன் இருப்பதைக் காட்டுகிறது. இந்தப் போராட்டம் தில்லி எல்லைகளுடன் முடிந்துவிடவில்லை. இது இந்தியா முழுவ தும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரு புதிய அலைக்கு வித்திட்டுள் ளது. நாடு முழுவதும் எண்ணற்ற மையங்களில் உணவுப் புறக்கணிப்பு உட்பட பல வடிவங்க ளில் போராட்டம் நடைபெற்றது. நாடு தழுவிய முறையில் எழுந்துள்ள இந்தப் போராட்டம், தில்லி போலீஸ் தாக்குதலையும் மீறி அவர்க ளின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்தியுள்ளது. நாடு தழுவிய அளவில் போராட்டத்தை விரிவு படுத்தப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ள னர். அமைதியான முறையில் வந்து தங்கள் உரிமைகளைக் கேட்ட மாணவர்களை, வன் முறையால் நசுக்க முயன்ற இந்த ஆட்சியின் முகம், ஜூலை 20-ஆம் தேதி இந்தியாவின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகப் பதியப்பட்டுள்ளது.