நாடு முழுவதும் பரவும் மாணவர்-இளைஞர் போராட்டம் தலைநகரை உலுக்கும் மாபெரும் கிளர்ச்சியின் 3 ஆவது நாள்- முழுமையான கள நிலவரம்!
22 Jul 2026, 8:43 pm

நாடு முழுவதும் பரவும் மாணவர்-இளைஞர் போராட்டம் தலைநகரை உலுக்கும் மாபெரும் கிளர்ச்சியின் 3 ஆவது நாள்- முழுமையான கள நிலவரம்!

புதுதில்லி இந்தியாவின் தலைநகரம் பதினாறு மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட துணை இராணுவப் படைகளின் முழுமையான பாதுகாப்பில் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. தில்லி முதல் கேரளா வரை இளம் தலைமுறையினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் போராட்டங்கள் மீதான அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக நாட்டின் ஜனநாயக அமைப்பு முறை சந்தித்து வரும் மிகப்பெரும் நெருக்கடி யின் மூன்றாவது நாளாக ஜூலை 22, 2026 பதி வாகியுள்ளது. தில்லி வீதிகளில் தொடங்கிய இந்த மாணவர் எழுச்சி, தற்போது நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தீயாய்ப் பரவி, ஒட்டு மொத்த அரசியல் களத்தையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

தலைநகரை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படைகளும் மாணவர்களின் தொடர் எழுச்சியும்

மூன்றாவது நாளாகப் போராட்டம் தீவிரம டைந்துள்ள நிலையில், மோடி அரசாங்கம் மாண வர்களுடன் ஜனநாயக முறையில் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, கூடுதல் படைகளைக் களமிறக்கி ஒடுக்கும் முறை யையே தீவிரப்படுத்தியுள்ளது. செவ்வாய்க் கிழமை இரவில் மத்திய உள்துறை அமைச்ச கத்தின் நேரடி உத்தரவின் பேரில், மேற்கு வங்கத்தில் இருந்து மத்திய ரிசர்வ் காவல் துறையின் 20 கம்பெனிப் படைகள் அதாவது சுமார் 2,000 வீரர்கள் விமானம் மூலம் புது தில்லிக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். ஏற்கெனவே தில்லி காவல்துறைக்கு உதவி யாகக் களமிறக்கப்பட்டிருந்த 30 கம்பெனி சிஆர் பிஎப் மற்றும் அதிரடிப் படை வீரர்களுடன் இவர் களும் இணைந்தனர். இதன் மூலம் புது தில்லி மாவட்டத்தில் மட்டும் பாதுகாப்புப் படை யினரின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டிச் சென்றுள்ளது.

இந்த கடுமையான முற்றுகையையும், தடை உத்தரவுகளையும் மீறி, ஜுலை 22 புதன்கிழமை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் அணிதிரண்டனர். கடந்த இரண்டு நாட்க ளாகக் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் களுக்குள்ளாகி, காயங்களுடன் கட்டுகளுடன் இருந்த போதும், மாணவர்கள் - இளைஞர்கள் எழுச்சி சற்றும் குறையவில்லை. ராய்ட்டர்ஸ் மற்றும் அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது போல, நரேந்திர மோடியின் அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டு அரசியல் சவாலாக இந்த மாணவர் போராட்டம் உருவெடுத்துள்ளது.

திங்கள்கிழமை லத்தியும், செவ்வாய்க் கிழமை வழக்குகளும் அரசின் அடக்குமுறை ஆயுதங்களாக மாறியிருந்த நிலையில், புதன்கிழமை அரசின் பிரதான ஆயுதமாக தில்லி நகரம் போலீஸ் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு இருந்தது. தில்லி மெட்ரோ ரயில் கழகம் பாது காப்புக் காரணங்களைக் கூறி ஜன்பத், ராஜீவ் சவுக், படேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட நான்கு முக்கிய நிலையங்களை மூடுவதாகத் தொடங்கியது. ஆனால், சில மணி நேரங்களி லேயே இந்தப் பட்டியல் 16 நிலையங்களாக உயர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் இல் லத்திற்கு அருகில் உள்ள லோக் கல்யாண் மார்க் மற்றும் ராமகிருஷ்ண ஆசிரமம் மார்க் உள்ளிட்ட பல முக்கிய மெட்ரோ ரயில் நிலை யங்களும் மூடப்பட்டன.

2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் ஒரு பிரம்மாண்டமான தலைநகரம், தனது சொந்த நாட்டின் மாணவர்கள் எழுப்பும் ஜன நாயகக் குரலைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசின் ஆணைகளால் முற்றிலுமாகப் பூட்டப்பட்டது. மத்திய தில்லியின் பிரதான பகுதிகள் முழுவதும் பலத்த இரும்புத் தடுப்பு கள் அமைக்கப்பட்டு, அடக்குமுறை வாக னங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

நீதித்துறையின் மௌனமும் காவல்துறை அடக்குமுறையும்

வீதிகளில் மாணவர்கள் கொடூரமாகத் தாக் கப்படுவதும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் குரல் எழுப்புவதும் ஒருபுறமிருக்க, இந்த விவகாரத்தில் நாட்டின் நீதித்துறையும் கடுமை யான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டுள் ளது. மாணவர்களுக்கு எதிரான காவல்துறை அடக்குமுறையை எதிர்த்துத் தாக்கல் செய் யப்பட்ட அவசர வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையின் கொடூரத் தாக்குதலைக் கண்கூடாகக் காட்டும் வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக வும், மாணவர்கள் தற்போதும் வீதிகளில் ரத்தம் சிந்தி போராடிக் கொண்டிருப்பதாகவும் மனு தாரரின் வழக்கறிஞர் வாதிட்டபோது, தலைமை நீதிபதி சூர்ய காந்த் அதனைச் சிறிதும் பொருட் படுத்தவில்லை.

வீடியோக்களைப் பார்க்க நீதிமன்றத்திற்கு நேரமில்லை என்றும், அதனைப் பார்க்கத் தமக்கு விருப்பமில்லை என்றும் அவர் வெளிப்படை யாகக் கூறியதுடன், நீதிமன்றத்தின் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ‘எச்சரித்து’ வழக்கை நிராகரித்தார். நாட் டின் உயரிய நீதிமன்றம், அரசு தன் நாட்டின் இளம் குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிடும் கொடூ ரமான வன்முறைக் காட்சிகளைப் பார்க்க மறுத் தது மாணவர்களிடையே கொதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

முன்னதாக மே மாதத்தில், நாட்டின் வேலை யில்லா இளைஞர்களையும் அமைதியாகப் போராடும் செயல்பாட்டாளர்களையும் ‘கரப் பான் பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என்று இதே தலைமை நீதிபதி குறிப்பிட்டதிலிருந்து தான் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற அமைப்பே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. தங் களை இழிவுபடுத்திய அதே நீதித்துறையின் உச்சம், தாங்கள் அடிபட்டு இரத்தம் சிந்துவதைப் பார்க்கக் கூட மறுப்பதையும் இந்த இளைய தலைமுறை ஆவேசத்துடன் விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறது.

மறுபுறம், காவல்துறை தனது சட்ட நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, மாணவர்களை ஒடுக்குவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகிறது. வன்முறை மற்றும் பொதுச்சொத்து சேதம் தொடர்பாக 6 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், ‘குற்றவாளிகளை’ அடையா ளம் காண 250-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தில்லி காவல்துறை உறுதிப்படுத்தியது. மாண வர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து தண் டிப்பதற்காக நூற்றுக்கணக்கான வீடியோக் களை ஆய்வு செய்ய அரசுக்கு நேரம் உள்ளது, ஆனால் அரசு நடத்தும் அடக்குமுறையிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க ஒரே ஒரு வீடி யோவைக் கூடப் பார்க்க நீதிமன்றத்திற்கு நேரம் இல்லை என்ற நியாயமான விமர்சனம் நாடெங் கும் வலுப்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவிய எழுச்சி

தில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தத் தீ, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் மிகத் தீவிரமாகப் பரவி பெரும் காட்டுத்தீயாக மாறி யுள்ளது.

* கேரளா: கேரளாவில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக ராஜ் பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. திருவனந்தபுரத்தில் இந்திய மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காங்கிரஸ் தலை மையிலான மாநில அரசின் காவல்துறையே அடக்குமுறை ஏவியது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கோழிக்கோடு மற்றும் கண்ணூர் பகுதி களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன.

* கர்நாடகா: பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் மாணவர் - இளைஞர்கள் நூற்றுக்க ணக்கில் திரண்டு தில்லி மாணவர்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்தனர். மாணவர்களின் போராட்டத்திற்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையைக் வன்மையாகக் கண்டிப்ப தாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவ குமார் தெரிவித்தார்.

* தெலுங்கானா: தெலுங்கானா முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி, எதிர்க்கட்சித் தலை வர்கள் கைது செய்யப்பட்டதையும், அமைதி யான முறையில் போராடும் இளைஞர்கள் மீதான காவல்துறை வன்முறையையும் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

* மற்ற மாநிலங்கள்: ஜம்மு-காஷ்மீர், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளிலும் காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணி களும் நடத்தப்பட்டன.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் இந்திய மாணவர் எழுச்சி

தில்லி வீதிகளில் நடந்து வரும் இந்த மாணவர் எழுச்சி சர்வதேச அளவில் மிகப்பெரிய கவ னத்தைப் பெற்றுள்ளது. ராய்ட்டர்ஸ், அல் ஜசீரா, ஏஎஃப்பி (AFP) போன்ற முன்னணி உலகளா விய செய்தி நிறுவனங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான மற்றும் தவிர்க்க முடியாத உள்நாட்டுச் சவாலாக இத னைக் குறிப்பிட்டு விரிவான செய்திகளை வெளி யிட்டுள்ளன. பாரம்பரிய தொழிற்சங்க அமைப்பு களைத் தாண்டி, சமூக ஊடகங்கள் மற்றும் நவீன மீம்கள் மூலமாகத் திரண்ட இந்த இளைய தலை முறை, ஹாங்காங் போராட்டங்களின் ‘Be Water’ உத்தியைப் பின்பற்றி காவல்துறையைத் திணறடிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் வியப்புடன் வர்ணித்துள்ளனர்.

20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி யாக்கிய நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு களின் தோல்விகள், கடந்த காலங்களில் மாண வர்கள் தற்கொலை செய்துகொள்ள வழி வகுத்துள்ளமை இந்த ஆவேசத்தின் ஆழத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அரசாங்கம் நினைத்தால் மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டுத் தீர்வு கண்டிருக்க முடியும்; ஆனால் அடக்கு முறையைத் தேர்ந்தெடுத்தது. மறுபுறம், ஒரு சீரழிந்த தேர்வு முறைக்கும், அதிகார ஆண வத்திற்கு எதிராகத் தன் இளமையை இழக்கத் தயாராக இல்லாத இந்தத் தலைமுறை, இந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வீதிகளில் எழுந்து நின்றுள்ளது. அடக்குமுறை களும் கைதுகளும் ஒருபுறம் தொடர்ந்தாலும், தில்லி வீதிகளில் எழும் இந்த மாணவர்களின் போர்க்குரல் ஒட்டுமொத்த தேசத்தின் மனச் சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.