தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான வழக்கு - கைதுகளுக்கு கண்டனம்

2 Aug 2026, 10:01 pm
தில்லி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றோர்  மீதான வழக்கு - கைதுகளுக்கு கண்டனம்

தில்லி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான வழக்கு - கைதுகளுக்கு கண்டனம்

தில்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்புபோராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதோடு, அவர்களின் வீடுகள் மற்றும் கல்விவளாகங்களுக்குச் சென்று கைது செய்யும் நடவடிக்கைகளில் தில்லி காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்திய மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவரான அய்ஷே கோஷை கைது செய்யும் நோக்கத்தோடுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி பவனுக்குள் தில்லி காவல்துறை அத்துமீறி நுழைந்திருக்கிறது.

தில்லி காவல்துறைக்கு கண்டனம்

நீட் முறைகேடுகளை தடுக்க வேண்டும், தேசிய தேர்வு முகமையைமுற்றாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டத்தில்ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பழிவாங்குவது, அவர்களின் எதிர்காலத்தை பறிப்பது உள்ளிட்ட நோக்கத்தோடு செயல்படும் தில்லி காவல்துறையின்நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.போராட்டங்கள் நடைபெற்ற வீதிகளில் ஆங்காங்கே இருந்த கண்காணிப்பு கேமராக்கள், மாணவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் வாயிலாக மாணவர்களை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தில்லி காவல் துறையினுடைய உளவுப் பிரிவு, மாணவர்களை கைது செய்வதற்காக பிரத்யேக செயற்கை நுண்ணறிவு கருவியையும் பயன்படுத்துகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

ஜனநாயக மாண்புகளை மீறும் செயல்

தில்லி போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் இதுவரை சுமார் 2,800 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுகைது நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லிகாவல்துறையின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளையும், ஜனநாயக மாண்புகளையும் மீறுகிற நடவடிக்கையாகும். மேலும் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போது ஒன்றியஅமைச்சர் ஜே.பி. நட்டா போராடும் மாணவர்கள் மீது எந்தவித வழக்குகளோ, பழிவாங்கும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது என அளித்த வாக்குறுதியை மீறும் வகையில்காவல்துறையினரின் நடவடிக்கைகள் உள்ளன.

வழக்குகள் பதிவதை கைவிட வேண்டும்

தில்லி காவல்துறையின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் போராடுகிற உரிமைகளை பறிப்பது, சட்ட மற்றும் ஜனநாயகமாண்புகளை மீறுவது உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை ஒன்றியஅரசு மற்றும் தில்லி காவல்துறை முற்றாக கைவிட வேண்டும். இதேகாலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பிறகும் சில இடங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்படுவது தவறான நடவடிக்கை. இது கைவிடப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்து கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.