முந்தய பக்கம்

தில்லியில் இளைஞர்கள் மீது தாக்குதல் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

22 Jul 2026, 10:13 pm
தில்லியில் இளைஞர்கள் மீது தாக்குதல் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>தில்லியில் இளைஞர்கள் மீது தாக்குதல் மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p><p>அருமனை, ஜூலை 22 - நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தில்லியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீதான தாக்கு தலை கண்டித்து நாடு முழு வதும் பல்வேறு அமைப்பு கள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து பல்வேறு பகுதிகளில் போ ராட்டம் மற்றும் தொடர் போ ராட்டங்கள் நடத்தி வரு கின்றன. இதனொரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனை நெடுங்குளம் சந்திப்பில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இப் போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி சுபிக்ஷா தலைமை வகித் தார். அருமனை பேரூராட்சி கவுன்சிலர் அனிதாசெலின், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சசி குமார், மாவட்ட நிர்வாகிகள் காவியா, ரெஜின், விஜி, வட்டாரத் தலைவர் சர வணன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram