தில்லி ‘ஸ்பெஷலிஸ்ட்’களும்... தேறாத நோயாளியும்!
16 Mar 2026, 4:46 pm

தில்லி ‘ஸ்பெஷலிஸ்ட்’களும்... தேறாத நோயாளியும்!

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியின் தற்போதைய நிலையைத் தனது பாணியில் ‘ஸ்கேன்’ செய்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் முன்வைத்த விமர்சனங்கள் இதோ:

ஐ.சி.யு-வில் கூட்டணி “உள்ளூர் மருத்துவர்களால் ஒரு நோயாளியைக் குணப்படுத்த முடிய வில்லை என்றால் தான், வெளியூரி லிருந்து ‘பெரிய விசிட்டிங் டாக்டர்கள்’ வருவார்கள். இப்போது மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வருவது அதற்காகத்தான். அதிமுக - பாஜக கூட்டணி இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்கிறது. எத்தனை பெரிய மருத்துவர்கள் தில்லியிலிருந்து பறந்து வந்தாலும், இந்த நோயாளி தேறப்போவதில்லை”. வாய் திறக்காத ‘அடிமை’கள் “சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் தவிக்கும்போது, தில்லிக்குச் சென்று ‘சரண்’ அடைந்து வருபவர்க ளுக்கு (அதிமுக) வாய் திறக்க சுதந்திரம் இல்லை. மோடி என்ன சொல்கிறாரோ, அதையே தேர்தல் ஆணையமும் செய்கிறது. எத்தனை ‘வித்தைகளை’ மேடையில் காட்டினாலும், தமிழ்நாட்டு மண்ணில் திமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்பது உறுதி.’ மக்களின் அமைதிப் புரட்சி “இது வெறும் ஓட்டுகளுக்கான மோதல் அல்ல; மாநில உரிமைகளை மீட்கும்போர். மொழி உணர்வும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். வடக்கிலிருந்து வருபவர்களின் தோல்வி பயம் தான் அவர்களைத் தமிழகம் நோக்கி ஓட வைக்கிறது. மக்கள் ஒரு ‘அமைதிப் புரட்சி’ மூலம் மீண்டும் ஸ்டாலின் ஆட்சியை உறுதி செய்வார்கள்.”