தில்லி போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கைது
10 Oct 2026, 11:49 pm

தில்லி போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கைது

கோவை, அக்.10-தில்லியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்புகண்டனம் தெரிவித்துள்ளது.

சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலக்கூட்டம்,

கோவை இன்ஜினியரிங் சங்க கட்டிடத்தில் சனியன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மின்சார வாரியத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து, நவம்பர் முதல் வாரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது. தில்லி ஜந்தர் மந்தரில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள், மாணவர், இளைஞர்கள், சிஜேபி,முற்போக்கு சக்திகள் இணைந்து ஒருபிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்தின்போது இடது

சாரி தலைவர்களையும், மாணவர் அமைப்பின் தலைவர்களையும் குறிவைத்து ஒன்றிய அரசு கைது

செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த கைது நடவடிக்கையை மின் ஊழியர் மத்திய அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது, இளைஞர்களை, மாணவர்களை, இடதுசாரிகளை ஒருபோதும் கைது செய்து, ஒடுக்கிவிட முடியாது. ‘நீங்கள் அடக்க அடக்க அது மிகப்பெரிய பூகம்பமாகவெடிக்கும்’ என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ்குமார் உடனடியாக விலக வேண்டும். மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். வாக்குகளைத்திருடி, மக்களின் உரிமையை கொள்ளையடிக்கும் செயலை இனி இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அத்தகைய போராட்ட பாதையில் நாங்களும் இணைந்து கொள்வோம், என்றார்.இந்நிகழ்வில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன், மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் லோகநாதன், கோகிலவாணி ஆகியோர் உடனிருந்தனர்.